உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

அடிகளார், தமிழர் மதம் இயற்றினார். சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆவர் என்னும் நூல்களும் இயற்றினார். கட்டுரைகளும் பலப்பல யாத்தார்.

"எந்நிலையில்நின்றாலும் எவ்வேடம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன் தாளை மறவாத" செல்வர் கா.சு. அப்பணிக்கே தம்மை ஒப்புக் கொடுத்தார்! அவர்தம் நூல்கள் எல்லாமும் சமயச் சீர்த்தி சாற்றுபவை எனின் சாலும்! அவற்றுள் ஒன்றே தமிழர் சமயம்'

பாவாணரும் 'தமிழர் மதம்' இயற்றினார். தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழிலக்கிய வரலாறு, தமிழர் திருமணம் இன்னவெல்லாம் இயற்றினார்! தனித்தமிழ்த் தந்தையார் மறைமலை என்றால், தனித் தமிழாம் தனியரசாண்ட கோவேந்தர் பாவாணர் எனத் தம் புகழ் நிறுவினார்.

இவர்களும் இவர்கள் வழிஞரும் எத்துணையோ முயன்றும் பாடுபட்டும் இன்றளவும் நிலைமை மாறிற்றா? ஒட்டு மொத்தத் தமிழரும் தம் முகத் திரையைக் கிழித்து வெளிப்பட்டால் அன்றி முழுமதியைக் காண முடியுமோ? முடியாது என்பது, அவர்கள் சமயச் சீர்திருத்தமெனச் சொல்லியவையெல்லாம் சொல்லள வாகவே நின்று விட்டன! அகலும் அறிகுறிதானும் அகப்பட வில்லை!" என்பதாலேயே விளங்கும்.

'சட்டப் பேரறிஞர் அவையம்' ஒன்று அமைக்க வேண்டும் என்று அவாவினார் கா.சு.

'தமிழர் சமயச் சங்க'மென நாடுதழுவிய ஓரமைப்பு வேண்டு மெனத் தொடக்க விழாவும் நடத்தினார். அனைத்திந்திய தமிழர் மத மாநாடு என்னும் பெயரால் 1940 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் கூட்டி வரவேற்புரையும் வழங்கினார் காசு.

அவ்வரவேற்புப் பொழிவும் தமிழர் சமயத்தின் முகப்பாக நின்ற அளவில் முடிந்து போயிற்று! தமிழ்ச் சமயம் தோன்றிற் றில்லை; தமிழ் வாழ்வும் தழைக்கவில்லை. உலகுக்கு வழிகாட்டத் தக்க உயர் சமயம் ஒடுங்கிக் கிடக்கின்றது. அதன்மேல்கவிந்துள்ள மூடுபனிக் கற்றையை முயன்று விலக்கி, உலகு காண வைக்க வேண்டும். அதற்குப் பணி செய்ய வருவாரைக் கண்டடையும் காலமேனும் அணித்தே உருவாக வேண்டும்.