உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

உமிழும் போது அவ்விடை அழகு அரும்புகிறது. திங்கள் தன் பால் நிலவை, வெள்ளை வெளேலென வெள்ளி அறல் படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது காலும்போது அங்கே அழகு ஒழுகுகிறது. இவ்வாறு சிலசில வேளைகளில் சில இடங்களில் அழகு தனது நுண்ணிய காட்சி வழங்குதல் உணர்க்,

இயைபுநடை

மு.அ.அ:15.

திருச்சியிலே கூட்டம்; ஓய்ந்த நேரத்தில் மாணாக்கர் ஈட்டம்.

உனக்கு முன்மதி; எனக்குப் பின்மதி

வா.கு.800.

வா.கு:709.

இரங்கல் நடை

காமச்சத்திரங் கட்டி நடாத்துவது அறமாம்! அந்தோ! அந்தோ! உலகம் எப்படி ஏமாற்றப்பட்டது! ஏமாந்த உலகமே! இன்னுமா ஏமாறுவை? ஏமாந்தது போதும்! போதும்!

இரட்டுறல் நடை

பெ.பெ. 194.

அவர் குணமலை; அவர் பெயர் மாணிக்கம்; மாணிக்கம் வகுப்பை ஒளிபெறச் செய்தது.

-

{மாணிக்கம் ஆரியர் இரத்தினம். மணி) வா.கு. 56

இருமை ஒருமைநடை - (இரண்டற்ற ஒருமை)

பறவையே பாட்டு; பாட்டே பறவை. திரு.வி.பாயி.176. அவர் தமிழாயினார்; தமிழ் அவராயிற்று.

இலக்கணநடை

வா.கு:160.

உழவு உழப்பு இரண்டும் ஒன்றே. இதனின்றும் வந்தது உழைப்பு. கிண்டல் கிளறல் கிளைத்தல் இவை யாவும் ஒரு பொருட்சொற்கள். இக் கிண்டல் முதலியவற்றை உழவு உழப்பு என்று ஆன்றோர் வழங்கியுள்ளனர்.

இலக்கணவிளக்க நடை

-

திருக்.விரி.பாயி. 203-4.

பெண்மை என்னுஞ் சொல், 'கடை' குறைந்து பெண்ணென நின்று பின்னைப் பெண்ணெனும் ஓர் இனத்தைக் குறிப்பதாயிற்று.