உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

தன்மை, அயற்கையாம்நடை

201

இவ்விளையாட்டில் இவனுக்குப் பங்கு உண்டா? இல்லையா? பாருங்கள்! இவன் மதிலைத் தாண்டான்; மரத்தை அணுகான். பின்னை என்ன செய்வான்? பிள்ளைகட்குச் சூழ்ச்சி சொல்வான்; சமயம்பார்த்துக் கல்லெறிவான்; விழுங் காய்கனிகளை ஓடி எடுத்துவருமாறு மற்றவரைத் தூண்டுவான்.

(அயற்கையாம் -அயலாராகக் கூறுவதாம்)

தன்மைநடை

வா.கு. 79

என் நா கனியினுஞ் செங்காயையே வேட்கும். செங்காய் என் பொருட்டு வாங்கப்படும்; பறிக்கப்படும்.

தொடர் நடை

வா.கு. 79.

திருவாரூர் தொன்மைக் களன்; தெய்வக்கோயில்; கலை நிலையம்; அன்புஊற்று; அருள்ஆறு; அங்கேகிள்ளை தமிழ்பாடும்; அதைப் பூவை கேட்கும்.

தொன்னடை

வா.கு. 9

எனது நடை பரிமேலழகர் நச்சினார்க்கினியர் நடையைக் கடுப்ப தென்றும், ஜான்ஸனைச் சிவணுவதென்றுங் கூறலாயினர்.

வா.கு. 141

(கடுப்பது - போன்றது; சிவணுவது பொருந்துவது;

இச் சொற்கள் தொல்பழநூல் வழங்கின)

நிகழாதன நிகழ்நடை

சோலையில் புகுவேன்.மரங்கள் கூப்பிடும்; விருந்து வைக்கும்.

நெடுந்தொடை நடை

வா.கு.121.

வெள்ளிக்கம்பியென நரைமயிர்திரண்டு, கண்குழி விழுந்து, பல்தேய்ந்து, நரப்புக்கட்டுக் குலைந்து, எலும்பு உலுத்து, முதுகு வளைந்த தொண்டு கிழவன், மேகங் கட்டுக்கட்டாகத் தவழ்ந்