உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

215

"இருபதில் எழுச்சி; முப்பதில்முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்; என்னும் பெதுவியல் தொண்டர் மாட்டும் ஆட்டம் காட்டவல்லதோ?" நழுவலுக்கு நழுவல் தருபவர் தொண்டர்; அசதிக்கே அசதியாக்குபவர் தொண்டர்; ஏக்கத்திற்கே ஏக்கம் தரும் எழுச்சியர் தொண்டர்; தூக்கத்தைத் தூக்கி எறியும் துணிவர் தொண்டர்; அத் தொண்டரியல் முழுதுருவாகச் செறிந்திருந்த பெருந்தகை திரு.வி.க. எழுபதில் இளமை திரும்புகிறது என்ற ஏந்தலை முதுமை வாட்டியதெனக் கூறலாமோ? தொண்டு அறவே கூடாது ஒழியும் நாளே, அவர்களுக்கு முதுமைநாள்! தொண்டு செய்யாத ஒரு நாளைக் கண்டறியாத திரு.வி.க. வாழ்வு என்றும் ளமை வாழ்வாம்,"என்றும் இளையாய் அழகியாய்' என முருகில் முதிர்ந்த வாழ்வு மூத்து விளியும் வாழ்வாமோ?

வாழ்க:

உள்ள உறுதியுடைய காளைக்கு வண்டியில் ஏற்றிய பாரம் சுமையாவதில்லை. வழியில் உண்டாம் இடர் இடராவதில்லை; முட்டும் குறுக்கீடுகள் முடக்கி வைப்பதில்லை. அந்நிலையரை அடுக்கும், இன்மைகள் எல்லாம் தவிடு பொடியாகிப் பாறையில் பட்ட பளிங்கெனத் துகள் துகளாகின்றன!

இன்பம் விழையாரைத் துன்பம் என்ன செய்யும்?

இடும்பைக்கு இடும்பை படுப்பாரை இடும்பை என்ன

செய்யும்?

வாழ்க்கைக் குறிப்பின் இறுவாய் வாழ்த்தைக் கூறி நிறைவாம்:

"என்பால் தொண்டுச் செல்வம் பெருகுமாறும் பொருட் செல்வம் பெருகாதவாறும் அருள் சுரந்த இயற்கை இறையை வாழ்த்தல் வேண்டாமா?" அது வாழ்க"

முற்றிற்று.