உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

இழப்பிலா இணைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

ஒவ்வொருவன் வாழ்வின் வெற்றியிலும், ஒவ்வொருத்தி மறைந்திருக்கிறாள் என்பது பெருமக்கள் வரலாற்றுச் செய்தி. திரு.வி.க. வுக்கு வாய்த்த துணை, வாழ்நாள் துணையாயிற்றா? கருத்தொத்துக் கனிந்த அவ்வாழ்வு காலமெல்லாம் கைகொடுத்து உதவியதா? இல்லையே! ஆனால், ஆறு ஆண்டு ஆறுநாள் (13.9.1912- 18.9.1918) வாய்த்த அவ்வாழ்வு. நெஞ்சில் என்றும் வாழ்ந்து கொண்டு தானே ன இருந்தது. 'பருவுடலம்' கழியும். நுண்ணுடலமாம் உயிருடலம் கழியுமோ? ஒழியுமோ? இருமையும் ஒருமையாதல் இல்வாழ்வு இலக்கணம்! அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்த திரு.வி.க. கமலாம்பிகையார் வாழ்வு, ஒருமையில் இருமை யாய் என்றும் ஒன்றியே நின்றது. இருக; ஒரு 'க'வுள் ஒன்றியது. ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்பதை மெய்ப்பித்த அவ்வாழ்வு, இழப்புக்கு ஆட்பட்ட தாமோ?இன்மையன்றோ இழப்பு? உண்மை இழப்பாமா? (இரு 'க'; கலியாணசுந்தரர்; கமலாம்பிகை)

இன்மைக்கு இன்மை

'தம்பொருள் என்பதம் மக்கள்' என்பது வாய்மொழி, திரு.வி.க.வுக்கு மகப்பேறு வாய்த்தும் - ஒன்றுக்கு இரண்டு வாய்த்தும் அவை நிலைத்தவோ? இருகுடிக்கு ஒருமகவாக வாய்த்த அண்ணார் அருமை மைந்தன் 'பாலசுப்பிர மணியன்' வ வாழ்வு தானும் நீடித்ததோ? அவன் மறைவு வாட்டி வாட்டி நெஞ்சை உருக்கி நெய்யாக்கிவிடினும் தொண்டு நின்றுபட்டதோ? உயிர்த் தொண்டிலே ஈடுபட்டவர் உயிர்ப்பு உள்ளவரை விட்டு ஒழிவரோ? மனைவி மக்களுடன் இணைந்து உயிர்த்தொண்டு செய்யவேண்டும் சுமையைத், தம் தலைமேல் தாமே அள்ளிப் போட்டுக் கொண்டு சுமக்கும் நிலையர் அவர்! ஆதலால் அவ் வின்மையும்இன்மையாய் அவர்களை வாட்டுவதில்லை.

வாழ்வில் பொதுநிலையரைத் தோல்வியுறச் செய்யும் செல்வம், கல்வி, தொழில், மனைவி, மக்கள் ஆகிய இன்மை யெல்லாம் தடையெல்லாம்- தொண்டரிடத்துமண்டியிட்டுத் தோற்றோடு கின்றன! இதனைத் திரு.வி.க. வாழ்வு மெய்ப்பிக்கின்றது.

ஊழை உப்பக்கங் காணல்

இனி ஊழால் - முறையால் - வந்தெய்தும் - முதுமை தானும் தொண்டர்தம் தொண்டைக் கெடுக்க வல்லதோ?