உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

213

உட்பட்டது. அப் பள்ளி நீங்கிய உலகப் பரப்புக் கல்விக்கோ, எல்லையில்லையே! அக்கல்வி பெற வாய்த்த ஒருவரைப் பள்ளிக் கல்வித்தடை என்ன செய்துவிட முடியும்! கல்வித் தடையையே, கல்வியாக்கிக் கொண்ட வெற்றிவாழ்வு அது.'

தொழிலிலாத் தொண்டுத்தொழில் :

தொழில் எனத் திரு.வி.க.வுக்கு எது வாய்த்தது? தொடக்க எழுத்தர் பணி நின்றதா? ஆசிரியப் பணி நிலைத்ததா? அவர்க்கென வருவாய்த்தொழில் என்ன தான் இருந்தது?இதழாசிரியத் தொழில், திரு.வி.க. போலும் சான்றோர்க்கு வருவாய் தருமோ? நூலாசிரியப் பணியும்தான் பொருள் குவிக்குமோ? 'தொழில்' என ஒன்றைச் சொல்ல முடியாத அல்லும் பகலும் ஓய்வு என்பதே இல்லாத தொண்டத் தொழிலை அல்லது தொண்டத் தொழிலைக் கொண்டவர்க்கு - தொண்டே பிறவிநோக்காகப் பிறங்கிய பெரு மகனார்க்குப் பொருள் வருவாய்தரும் தொழிலின்மை ஓர் ன்மையாமோ? ஒரு தொழில் என்னும் கட்டு இருந்தால்தானே, அத்தகையர்க்கு இடர்? தொழில் தன்னளவில் நலம் தேடுவது! தொண்டோ, எல்லாவுயிர்களுக்கும் நலம் சூழ்வது. வானத்துப் பறக்கும் பறவை வாழ்வும் நிலத்துத் தவழும் தவளை வாழ்வும் ஒப்பவை தொண்டு வாழ்வும் தொழில் வாழ்வும் என்க. ஆகவே, தொழிலொன்றை நாடாமையால் தொண்டத்தொழிலையே தொழிலாக்கி அத் தொழில் நிலையை வென்றவரானார் திரு.வி.க. நோய்க்கு நோய் செய்தல்

திரு.வி.க. இளமையிலேயே நோய்க்கு ஆட்பட்டவர். மருந்தாலும், மனத்திண்மையாலும் ஓயாப்பணியாலும் நோயை வென்றவர்.பின்னே கண்ணொளி மழுங்கி மழுங்கிப் படலம் முற்றும் மறைக்கவும் படுக்கையில் கிடந்தவர். ஆயினும் அந்நோய் அவர் பணிக்குத் தடையாயிற்றோ? முருகன் அல்லது அழகு, ளமை விருந்து; பெண்ணின் பெருமை, மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும், தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல் இன்ன வெல்லாம் பொழிந்த வாயும் கையும், பார்வையற்றுப்படுக்கையில் கிடந்தநாளிலும் பணியோய்வு கொண்டவோ? முதுமை உளறல், படுக்கைப்பிதற்றல், செத்துப்பிறத்தல் படைத்ததே! இருளில் ஒளி தந்ததே! நோயும் பிணியும் உள்ளொளித் தொண்டை ஒடுக்கி யவோ? அவற்றை ஊர்ந்து வாகை கொண்ட வரலாறு அல்லவோ திரு.வி.க.வரலாறு!