உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்வமிலாச் செல்வம்

12. இறுவாய்

"யான் ஒரு சிறுகுடிலில் பிறந்தவன்; எளிமையில் வளர்ந்தவன்" என்பது திரு.வி.க. வாழ்க்கைக்குறிப்பு முன்னுரையின் முன்னுரை!

என் வாழ்க்கை யானைச் செல்வம் பெற்றதா? பூனைச் செல்வமாதல் பெற்றதா? என்பது 'பிறப்பின்' ஆறாம் பேற்றில் கிளரும் ஒரு வினா.?

"வாழ்க்கைக்கு ஏதேனும் ஒரு செல்வம் தேவை. எச் செல்வமும் பெறாத வாழ்க்கை வாழ்க்கையாகாது. என் வாழ்க்கை ஏதேனும் செல்வம் பெற்றதா?" என்பது இறுவாய் வினா

'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' எனப்பொய்யா மொழியில் புகலப்படுவது. அப் புகற்சி பொதுமை சட்டியது. திரு.வி.க.வாழ்வில் பொருள் வளம் எழுவாய் முதல்இறுவாய் வரை ஆட்சி நடத்தவில்லை. அதனைப் போற்றாரிடம் பொங்குமோ, தேடிச் செல்லும் வழியைத் தேடவே உள்ளமில்லார்க்குப் பொருள் கூடிக் குவியுமோ? ஆயின் அப் பொருளிலா வறுமை, வாழ்வைக் கெடுத்ததோ? தொண்டைத் தடுத்ததோ? செல்வமின்மையே செல்வ மாக்கிக்கொண்ட ஒருவரைச் செல்வமின்மை என்ன செய்யவல்லது?

கட்டிலாக் கலைவளம்

கல்வி தொடக்க நாளிலேயே தடையுற்றது; பள்ளியிறுதி வகுப்பில் முழுத்தடையாய் முடிந்தது. அக் கல்வித் தடை அறிவுத் தடையாயிற்றோ! இல்லை! பள்ளிப்படிப்பு முற்றும் நின்று விட்டபின்னரே பலதுறைக் கல்வி பெற்றார். பன்மொழிக்கல்வி பெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாம் இயற்கைக் கல்வி பெற்றார். உள்ளொளிக் கல்வி பெற்றார். ஆகலின் பள்ளிக்கல்வி முற்றும் வாயாமை, தடையாயிற்றில்லை! பள்ளியெல்லை என்பது கால வரம்பு, இடவரம்பு, துறைவரம்பு, பாட அளவு வரம்பு ஆயவற்றுக்கு