உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

13

பெண்ணொரு திறப் பெருமான்' வடிவாகச் சிவனியத்தையும் மாலியத்தையும் கண்டவர்கா.சு. அக் கா.சு. இலக்கியக் குழு கண்ட மீ.சு. பெண்ணொரு கூறர். எப்படி? இளமுருகர் அவர்! பொற் செல்வியார் அவர்தம் வாழ்வரசியார்! இருவரும் இணை பிரியா ணைச் சான்றாய் இளமுருகு பொற்செல்வியர்! குருவன் கொள்கை. கொண்டொழுகும் வழிஞர் மாண்பு இது!

இளமுருகரும் பொற்செல்வியாரும் பெயருக்குள் மட்டும் ஒன்றியவரோ? இல்லை! பேச்சு, எழுத்து, தொண்டு ஆகிய அனைத்தினும் ஒன்றியவர். இருதலை ஒரு புறாவென இயைந்து தொண்டுக்கே தம்மை ஆக்கிக் கொண்டவர்கள்.

-

கா.ச.' நினைவு, காசொடு நின்றதா? தமிழ் தமிழினம் தமிழ் வாழ்வு ஆகிய முந்நிலைகளிலும் முழுத் தொண்டுக்கு ஆட்படுத்திக் கொண்டது! எழுபது கடந்த இ ளைஞரும் இளைஞையும் இருபது அகவை எழுச்சிப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுளர். எண்ணத்தின் இளமைக்கு அகவைக் கணக்கென ஒன்று உண்டோ?

-

கா.சு.'நினைவு இலக்கியக் குழுவின் பொழிவு குழித் தலையுடன் நின்று விடுதல் கூடாது. காற்றொடு போதலும் கூடாது. வள்ளுவ வாய்மொழிப்படி, வினையால்வினையாக்கி எழுத்து வடிவில் இறக்கி விடுதல் வேண்டும். அவ்வெழுத்து இறக்கமும், பொழிவுப் போழ்திலேயே ஆர்வலர் கைகளில் தவழ வேண்டும்! 'காசு' வைத் தமிழ்நூற் குழந்தையாக்கிப் பயிறலிலே அத்தகைய பற்று 'மீ.சு.'வுக்கு.

“மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம்மற்றவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’

55

என்பதன்றோ நம் மறை! செவிக்கின்பை உடற்கின்பாக்கி அதன் வழியே உயிர்க்கின்புமாக்கித் தம்மோடு தமிழுலகும் கூட்டுண்ணச் செய்விக்கும் செம்மல், தொண்டுச் செல்வர் இளமுருகு பொற் செல்வியர்க்கு நெஞ்சார்ந்த நன்றியுடையேன்! என் நெஞ்சில் தமிழ்க் கா.சு. வைத் தேக்கி வைக்கும் ஆக்கத்தைத் தேடி வைத்த ருளியவர் அவரல்லரோ!