உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

35

உணவுக்கும் நாகரிகத்திற்கும் இயைபு என்னை எனின் மிகவுண்டா. 'மடைநூல்' என ஒரு நூல் பழங்காலத்தில் விளங்கிய செய்தியுண்டு. இந்நாள் சயைமற் குறிப்பு நூல்கள் எத்துணை! இதழ்களில் கட்டுரைகள் எத்துணை உடலுக்கு ஊறு செய்யா வகையிலும், உணவே மருந்தாகவும் மருந்தே உணவாகவும் போற்றத் தக்க அமைவுடையது அட்டிற்கலை!

திருக்குறளில் வரும் மருந்து அதிகாரச் செய்தி என்ன? உணவுச் செய்தியே பெரிதும்! "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பதும், "உண்டிமுதற்றே உணவின் பிண்டம்" என்பதும் பழநூற் காட்சிகள். "கையறி மடைமையில் கண்ணகியார் சமைத்தது சிலம்புச் செய்தி! 'குய்ப்புகை கமழத் தீம்புளிப்பாகர்' ஊட்டும் தலைவி மகிழத் தலைவன் இனிது என்ன. அவள் முகமலர்தல் குறுந்தொகைக் காட்சி. ஆகலின், நாகரிகத்தில் தலைப்பாடு உடையதாகக் 'கா.சு' 'உண்டி'யைத் தொடங்குகிறார். அரிசி

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விளைவில் நெல்லுக்குத் தனி இடம் உண்டு. நெல்லரிசியால் ஆய சோறே சோறு எனக் கொண்டது அவர்கள் வாழ்வு.

'சொல்' என்பது நெல் என்னும் பொருள் தரும் சொல். நெல் அரிசியால் ஆய சோறே. 'சொன்றி' என்றும் சோறு என்றும் குறிக்கப்பட்டதாம்.

அவ்வரிசியின் பழமை அரும் பழமையாம். அரிசி என்னும் சொல் கிரீக் மொழியில்அரிசா (Oriza) என்றாய் அதிலிருந்து ரைஸ் (Rice) என்னும் ஆங்கிலச் சொல் வந்தது. அரிசிப் பழமையும் செல்வாக்கும் உலகப்பரவலும் உணரத்தக்கதாம்.

இருக்கு வேதத்தில் அரிசிக்குறிப்பு இல்லை என்றும், கோதுமை பார்லிக் குறிப்பு உண்டென்றும் குறிப்பிடுகிறார் கா.சு. ஆண்

"ஐந்தும் மூன்றும் இருந்தால் அறியாப் பெண்ணும் ஆக்கிப் படைப்பாள்" என்பது வழங்குமொழி ஐந்து ஐந்தறைப்பெட்டியில் உள்ள ஐந்து பலசரக்குகள். மூன்று என்பது பால், தயிர், நெய் என்பன. இம்மூன்றும் பாற் சோறு, தயிர்ச்சோறு, நெய்ச் சோறு