உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தமிழர் கலைகள்

தமிழர் பண்டைய நாகரிக நிலை, நாட்டியக்கலை, இசைக் கலை என்னும் முப்பகுதியும் 'தமிழர் கலைகள்' என்னும் இப் பகுதியில் கருதப்படுகின்றன.

நாகரிகம்

CC

BIT

கரிகம் என்பது நகரமக்களின் திருந்திய வாழ்க்கை. நாகரிகம் என்னும் சொல் நகரகம் என்னும் சொல்லின் திரிபாகும். (நகர் + அகம் = நகரகம். நகரகம் - நகரிகம் - நாகரிகம்)

'எல்லா நாட்டிலும் மாந்தர் முதல்முதல் நகர நிலையிலேயே நாகரிகமடைந்துள்ளனர். அதனால் நகரகப் பெயரினின்று நாகரிகப்பெயர் தோன்றியுள்ளது. சிற்றூர் கட்கும் நகரங்கட்கும் எவ்வளவோ தொடர்பேற்பட்டுள்ள இக்காலத்தும் நாகரிக மில்லாதவன் நாட்டுப்புறத்தான் என்றும் பட்டிக்காட்டான் என்றும் இழித்துக் கூறுதல் காண்க. நகரப்பதி வாழ்நர் என்னும் சொல் நாகரிக முள்ளோரைக் குறிக்கும் இலக்கிய வழக்கையும் நோக்குக.

“ஆங்கிலத்திலும் நாகரிகத்தைக் குறிக்கும் இலத்தீனச் சொல் நகரப் பெயரினின்று தோன்றியதே. L. Civitas, City or City - State, CIVIS Citizen, L. Civbilies - E. Civil - Civilize.'

""

என்று நாகரிக வேர் கண்டு நயமிகக் கூறுவார் பாவாணர். (பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்.1)

உணவு, உடை, அணிகலன், ஓவியம், கட்டடம் ஆகிய வற்றைப் பற்றி 'நாகரிகநிலைக்' கட்டுரையில் எழுதுகிறார் கா.சு.

உயிர்வாழ்வுக்கு உண்டியும், பருவக்காப்பு மானக் காப்பு ஆகிவற்றுக்கு உடையும், அழகுக்கும் வளமைக்கும் அணிகலனும், காட்சியின்பத்திற்கு ஓவியமும், உறைவுக்கு உறையுளும் வேண்டத் தக்கவையாகலின் அவற்றை முறையே விளக்குகின்றார்.