உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

33

அவ்வகர முதலி ஐஞ்சிறுபகுதிகளாக அகரந் தொடங்கி உகரந்தானும் நிறைவுறாமல் நின்றது. அதற்கே 1938 தொடங்கி 1944 ஆயிற்று. ஆயின் அதன் பின்னர் அப்பணியினும் அழுத்தமாக முதல் தாய் மொழி, ஒப்பியன் மொழிநூல் வேர்ச் சொற் கட்டுரைகள் முதலியவற்றைப் பாவாணர் எழுதி, தமிழ்திராவிட மொழியின் தாயும், ஆரியத்திற்கு மூலமுமாம் என்றும், மாந்தன் பிறந்தது குமரிக்கண்டமே என்றும், அவன் பேசிய முதன் மொழி தமிழே என்றும் நிறுவிக் காட்டினார். அவர்தம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி, அகர முதன் மடலத்தோடு அமையாமல் முற்றாக வெளிப்பட்டிருப்பின் தமிழ்க் கா.சு. எண்ணம் அவர் எண்ணிய அளவினும் அழுத்தமாக நிறைவேற்றப் பட்டிருக்கும்! எனினும் அத்தொண்டு இது கால் உலகளாவிய தொண்டாக விரிவுற்று வருவது எதிர்கால வெற்றியை நிலைப் படுத்துவதாக உள்ளது.