உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் எழுந்த பெரிப்புளுசு (Periplus) என்னும் கிரேக்க நூல் தமிராய் (Tamirai) என்று குறித்துள்ளது.

பியூத்திங்கர் அட்டவணை (Peutinger Tables) என்னும் உரோம ஞாலப்படங்களில் (Atlas) தமிழகம் தமிரிக்கே (Damice) எனக் குறிக்கப்பட்டுள்ளது.

தாலமி (Ptoleme) என்னும் எகுபதிய ஞலநூலார் (கி.பி.139- 161) பியூத்திங்கர் அட்டவணையிடப் பெயர்களைப் பெயர்த் தெழுதும் போது, கிரேக்க டகரத்தை லகரமாகக் கொண்டு, திமிரிக்கே (Dymirice) என்னும் பெயரைத் தவறுதலாக லுமிரிக்கீ (Lumiriki) என்று எழுதிவிட்டார். ஆயினும் அவருக்குப் பின்னர் வந்த ரேவண்ணா (Ravanna) ஞாலநூலார் தமிரிக்கா (Damirica) எனத் திருத்திக் கொண்டார்.

தமிழ் என்னுஞ்சொல், கி.பி.7-ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த இவென்திசாங் (Hwen Thsang) என்னும் சீன வழிப்போக்கர் குறிப்பில், சிமொலொ (Tehi-o-lo) என்னும் வடிவில் உள்ளது.

இதைத் திமல (Dumala) அல்லது திமர (Dimara) என்றும் படிக்கலாம் என்பர் கால்டுவெலார்.

பாலிமொழியிலுள்ள மகாவமிசம் (Maha (Vamso) என்னும் இலங்கை வரலாற்றில் த்மிலோ (Damilo) என்னும் வடிவமே உள்ளது. ஐரோப்பியர் பொதுவாகத் 'தமுல்' (Tamul) என்றனர். அவருள் தேனியவிடையூழியர் (Danish Missionaries) மட்டும் 'தமுலிக்கமொழி' (Linga Damulica) என இலத்தீன் வடிவில் குறித்தனர். ஆங்கிலத்தில் 'தமிழ்' (Tamil) என்னும் வடிவம் வழங்குகின்றது. மாக்கசு முல்லர் தென் மொழிக் குடும்பத்திற்குத் தமுலிக்கு (Tamulic) எனப் பெயரிட்டனர் (தமிழ் வரலாறு. முன்னுரை 31-32)

உலக முதன் மொழி

CC

"இலங்கை அறிஞராகிய ஞானப்பிரகாசப் பாதிரியார் தமிழோடு பிறமொழிகளுக்குள்ள ஒற்றுமையைக் காட்டி ஒரு பேரகராதி வெளியிட்டு வருகிறார். அது முற்றுப் பெறுமாயின் தமிழின் பழமையும் அது மக்களின் மூல முதல் மொழியோடு ஒத்திருக்கின்ற தன்மையும் நன்கு துலங்கும்" என எதிரது போற்றி மொழிவார் கா.சு.