உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

31

வடமொழியினின்று தமிழ் வந்தது என்பாரை மறுத்துத், 'திராவிடர் காலத்தால் ஆரியர்ககு முற்பட்டவர்' என்றும், "திராவிடம் மொழி வளர்ச்சியில் முற்பட்ட ஒட்டுச்சொல் நிலை யிலும், ஆரியம் பிற்பட்ட உட்பிணைப்பு நிலையிலும் இருப்பதால் இரு மொழிக்கு முரிய ஒப்புமைப் பகுதிகள் திராவிடத்திலிருந்தே ஆரியத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என்றும் சான்றுடன் விளக்குகிறார்.

திராவிட மொழிகளுக்கும் ஆரியமொழிக்கும் உள்ள அடிப் படை அமைப்பு வேறுபாடுகளைக் கால்டுவெல் கண் காணியாரின் ஒப்பிலக்கண ஆய்வு முறையில் சொல்வதுடன், வடமொழியி லுள்ள தமிழ்ச் சொற்களையும் குறிப்பிடுகிறார்.

ஓரொப்பு

பலமொழிகளின் ஒற்றுமையை நோக்குங்கால் அவர்களின் முன்னோர்கள் ஓரிடத்தில் முதற்கண் தோன்றி ஒருமொழி பேசினர் என்பது ஊகிக்கப்படும். மொழி தோன்றுங்கால் ஓரிடத் திலிருந்து பின்னர்ப் பிரிவுற்று வெவ்வேறு டங்களில் தங்கி அவ்வவ் விடங்களுக்குத்தக்க நாகரிகங்களை மக்கள் தோற்று வித்து வளர்த்தனராதலின் மக்களினத்தார் பலரும் மொழி வேற்றுமையும் நாகரிக வேற்றுமையும் உடையவராயினர் என நிறுவுகிறார்.

தமிழ் என்க

66

இனித் திராவிட நாகரிகத்தை விளக்கும் தனி மூல இலக்கியங்களும் இலக்கணங்களும் கல்வெட்டுகளும் தமிழிலேயே உள்ளன." ஹெரோடட்டஸ் கி.மு. 493 இலும், மெகஸ்தனீஸ் 300- க்கு முன்னும், ஸ்டிராபோ கி.பி. 20-இலும், பிளினி 77-இலும், தாலமி -130 இலும் வாழ்ந்தவர்கள், இவர்கள் தமிழ், தமிழர், தமிழகம் என்றே வழங்கினர். ஆதலால் ஆராய்ச்சிக்குத் திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்ற சொல்லை வழங்குதலே பொருத்தமாகும் என்று முடிக்கிறார்.

உலகளாவிய தமிழ்

தமிழ் என்னும் சொல்லையொத்த பெயர்களை வெளி நாடுகளில் வழங்கியமையைத் தமிழ் வரலாற்றில் குறிக்கிறார்

பாவாணர்.