உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

முதலியவற்றிற்கும் திராவிட மக்களின் உடற்கூறு பழக்க வழக்கங்கள் மொழி என்பவற்றுக்கும் உள்ள ஒற்றுமையேயாம் என்க. அக் காரணத்தை வைத்தே இந்நாட்டினின்று வெவ்வேறு வெளிநாடு களுக்குத் திராவிட மக்கள் சென்று தங்கினர் என்று கூறுவதற்குத் தடையாது?" என வினாவுகின்றார்.

"மேலும் அந்நாட்டில் இருந்து இங்கே மக்கள் வந்தனர் என்றால், அந்நாட்டுக்கு முதல்முதல்மக்கள் எங்கிருந்து போயினர் என்ற கேள்வி எழும்" என்று வினா எழுப்பித் தமிழர் இந்நாட்டவரே என நிலைப்படுத்துகிறார். அன்றியும் அறிவர் கிரை யர்சன், அறிவர் பெர்கூசன், அறிஞர் பி. தி.சீனிவாச அய்யங்கார் முதலி யவர்கள், "தமிழர்கள் இந்நாட்டுக்கே உரிய பண்டை மக்களினத் தவர்கள்" என்பதை எடுத்து விளக்குகிறார்.

மாந்தரின் தோற்றம்

முதல்முதல் மாந்தர் தோற்றம், கடல்கொண்ட தென்னா ட்டிலேயே ஏற்பட்டது என்பதையும் விரித்தெழுதுகிறார்.

கடல் கொண்ட தென்னாட்டில் நீகிரோ இனத்தவர் முதன் முதலாகத் தோன்றி ஆபிரிக்கா, கீழையாசியத் தீவுகள் ஆகி கிய வற்றிலும் தங்கினர். பின்னர் மஞ்சள் நிறத்தவராம் மங்கோலிய இனத்தவர் தோன்றிச் சீனநாட்டில் நிலைவரமாகத் தங்கினர். அவர்க்குப் பின், முன்திராவிடரும் தோன்றி எகித்து நாட்டில் தங்கியும், மங்கோலியரோடு கலந்தும் நின்றனர். ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெற்றனர். ஐரோப்பிய நாடுகளில் தங்கிய பண்டை மக்களே ஆரியர் என்னும் பெயருடன் தெற்கே மீண்டனர். இக்கருத்துகளை வலியுறுத்தும் கா.சு. ஒருவேளை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறபடி, "திராவிடர் வேற்றிடத்திலிருந்து இவண் வந்தவரே எனினும் ஆரியர் வருகைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவுக்கு வந்து, நாடு முழுவதும் நாகரிகத்தைப் பரப்பியர்' என்பதற்கு ஐயமில்லை என்றும் வலியுறுத்துவார். தமிழர் நாகரிகம்

இறந்த முன்னோர் வழிபாடு, நினைவுக்கல் நாட்டல், மறு பிறப்பு நம்பிக்கை, சிவலிங்கவழிபாடு முதலியவெல்லாம் புதுக் கற்காலத்திலேயே தோன்றிவிட்டன என்றும், சிந்துவெளி நாகரிகம் தமிழரதே என்றும் விரிவாக விளக்குகிறார். சுமேரிய நாகரிகத்திற்குச் சிந்து நாகரிகமே முற்பட்ட என்றும் நிறுவுகிறார்.