உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

29

ஆங்கில ஆடவர்க்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்த வர்கள் ஆங்கில மொழியைத் தங்கள் வீட்டு மொழியாகப் பேசி வருவதைச் சுட்டுகிறார்.

இவற்றால் தமிழைத தாய்மொழியாகக் கொண்ட வரும், தமிழரோடு கலப்புற்றுத் தமிழைத் தாய்மொழியென ஏற்றுக் கொண்டாரும் தமிழரே என்னும் விளக்கம் கிடைக்கின்றது.

இன்னும் மொழியை வைத்து மக்களின் இனத்தைக் கூறுவது உண்டெனினும் ஓர் இனத்தாரின் மொழியை அவர்களோடு ருங்குவாழும் மற்றோர் இனத்தார் தழுவிக்கொள்ளுதலும் உண்டு.

யூதர் என்பார் ஐரோப்பாவில் வெவ்வேறிடத்தில் வெவ்வேறு மொழிகளைத் தங்கள் சொந்த மொழியாகப் பேசுவதை எடுத்துக் காட்டி விளக்குகிறார் கா. சு. இவ்வகையில் பல நூற்றாண்டுகளின் முன்னே தெலுங்க நாட்டினின்று இவண்போந்து தமிழைத் தாய்மொழியாகவே கொண்டு விட்டவரும் தமிழரென்றே கொள்ளல் வேண்டும் என்னும் கருத்து விரிவாக்கம் பெறுவதாம். தமிழர் தமிழகத்தாரே

தாலமியின் குறிப்பில் தமிழ், தமிழகம் என்பவை இடம் பெற்றிருத்தலைக் குறிக்கிறார். 'திராவிடம்' என்னும் சொல்லில் இருந்து தமிழ் என்னும் சொல்வந்தது என்பதை மறுக்கிறார் கா.சு.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளுவம் ஆகிய மொழிகளை ஒருசேரக் குறிக்கும் சொல் திராவிடம் என்பது என்றும், அது வடநாட்டவர் வழங்கியது என்றும், தமிழரைத் தனியே குறிக்கத் தமிழர் என்றே வழங்கினர் என்றும் பலப்பல சான்றுகளால்நிறுவுகிறார். கால்டுவெல் ஐயர். பி. தி. சீனிவாசய் யங்கார் கூற்றுகளை எடுத்தாள்கிறார். தொல்காப் பியத்திலேயே 'தமிழ்' என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தலையும் விளக்குகிறார்.

இனித் திராவிடர் இந்நாட்டுப் பழங்குடிகள் அல்லர்; அவரும் பிறநாட்டினின்றே ஆரியர் வருகைக்கு முற்பட வந்தவரே என்று கூறுவார் கருத்தை நயத்தக மறுக்கிறார்:

"வெளிநாட்டிலிருந்து அவர்கள் இங்கே வந்தவர்கள் என்று சொல்பவர்கள் அங்ஙனம் சொல்வதற்குக் காரணம் அங்கங்குள்ள மக்களுடைய உடற்கூறுகள் பழக்க வழக்கங்கள் மொழிகள்