உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

தாய்மொழியாக உடையவரே ஆங்கிலர் எனப்படுதல் தெளிவே யன்றோ! இத்தெளிவை 1933 இல் நிகழ்ந்த ஒருநிகழ்வு காட்டுகின்றது.

தமிழன்பர் மாநாடு

சென்னை பச்சைய்பபன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆம் நாட்களில் 'தமிழ் அன்பர் மாநாடு' என ஒன்று நிகழ்ந்தது. அந்நாள் சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திவான் பகதூர்குமாரசாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். அம் மாநாட்டுக்கு மறைமலையடிகளார் அழைக்கப்பெற்றார்.

அழைப்பு அறிக்கை ஆகியவற்றில் பொக்கிஷதார், காரிய தரிசி, அங்கத்தினர், மகாநாடு, தமிழபிமானி, புத்தகாலயச் சங்கம், பத்திரிகைகள், வியூகங்கள், அபிப்பராயம், சீக்கிரம், நகல், கஜான்ஜி, தமிழ் பாஷை, புராதனம், ஜனங்கள், ஆலோசிப்பது, பிரசார சங்கம், விஜயம், ராஜதானி இன்னபல சொற்கள் இடம் பெற்றிருந்தன. இம் மாநாட்டார் 'தமிழர் மாநாடு' என்றார் அல்லர். தமிழன்பர் மாநாடு என்றே கூட்டினார். அதனால், "தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்து கொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றிலும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்றும் தன் பண்டைநலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிறமொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும் அதன் வளர்ச்சியினைக் குன்றச் செய்யுமென்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமதுதனித்தமிழ்க் கொள்கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மாநாட்டிலே கலந்து கொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக" என்று மறுத்தெழுதினார் மறைமலையடிகளார்.

தமிழர் விரிவாக்கம்

தமிழ் மொழியைத் தாய்மொழியாக உடையவர்தமிழரே எனினும், அவரொடு இன்னொரு மொழி இனத்தார்இணைந்து அவர் மொழியையே இணைந்தவரும்பேசுவராயின் - தம் தாய் மொழியெனக் கொள்வராயின் - அவரும் தமிழர் எனத்தக்க வரேயாம். இக்கருத்தால் "மொழியானது இனத்தையும் இனச் சார்பையும் குறிக்கும்" என்று தெளிவாக்குகிறார் கா.சு.