உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தமிழர்

தமிழர்

நூற்பெயரிலுள்ள இருசொற்களில் முன்னது 'தமிழர்!' தமிழர் என்பார் இல்லாக்கால், அவர்தம் சமயமெனச் சொல்ல வேண்டுவதென்ன? தமிழ் மாந்தர், கண்டு கண்டு கடைப் பிடியாகக் கொண்ட கோட்பாடே சமயமாதலின் 'தமிழர்' என்பாரே எழுவாய்! அவர் தம் சமயமே பயனிலை!

'தமிழ்' என்பது மொழியின் பெயர். அம்மொழியைப் பேசியதால் 'தமிழர்' எனப்பட்டனரா? தமிழர்பேசியதால் அம் மொழி 'தமிழ்' என ஆயிற்றா?

தமிழர் என்பதில் முன்னது தமிழே ஆதலால், அத் தமிழை யுடையவரே - அவ்வுடைமையாலேயே தமிழர் எனப்பட்டார் என்றும், அவர் வாழ்ந்த நாடு 'தமிழ் நாடு' என்றும், 'தமிழகம்' என்றும் 'தமிழ்கூறு நல்லுலகம்' என்றும் வழங்கப் பட்டன என்றும் அறியலாம்.

தமிழர் யார்?

தமிழர் யார்? என்னும் வினாவை எழுப்பிக் கொண்டு விடை தருகிறார் கா.சு.

"தமிழர் யார் எனில், தமிழ் மொழியைத் தாய் மொழியாக உடையவர் யாவரும் தமிழரே" என்பது அது.

தமிழ் பேசுவார், தமிழகத்து வாழ்வார்; எனினும் தமிழைத் தாய்மொழி என்னார்! அவர் தமிழறிந்தவர், எனின், தமிழறிந்தவர் என்றும்; தமிழ் கற்றவர் எனின், தமிழ் கற்றவர் என்றும்; தமிழ்மேல் அன்புடையவர் எனின், தமிழன்பர் என்றும் சொல்லப் படுவா ரெயன்றித் தமிழர் என்னப்படார். ஆங்கிலம் பயின்றாரும், ஆங்கிலம் பேசுவாரும், ஆங்கிலப் பாடம் நடத்துவாரும், ஆங்கில நாட்டு வாழ்வாரும் ஆங்கிலர் எனப்படுவரோ? ஆங்கிலத்தைத்