உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

சமயம் என்னும் இருகால் தூணங்களின் மேல் எழுப்பிய 'தோரண வாயி 'லெனத் திகழ்வதால் அவ்வரவேற்புரையும் தமிழர் சமய முகப்பாக வைக்கப்பட்டது. முதல் இருபத்திரண்டு பக்கங்களில் அவ்வுரை இடம் பெற்றுளது.

நூல், தமிழர் யார் என்பது முதலாகத் தொகுப்புரை ஈறாகப் பதினெட்டுத் தலைப்புகளில் இயல்கின்றது.

இச்சிறு ஆராய்ச்சியின் விரிவை விரைவில் தமிழறிஞர் உலகம் எதிர்பார்த்ததென்றும், தமிழர் சமயக்கடன்களைத் தொகுத்தும் வகுத்தும் வரிசைப்படுத்திச் சேர்க்க வேண்டும் என விரும்பியதென்றும், மதிப்புரையால் விளக்கமாகின்றது. நூலாசிரியரும் அக்கருத்துடன் இருந்தார் என்பதை "நூலின் நிறைவில் இதன் விரிவும் திருத்தமும் எதிர்காலத்தில் நிகழற்பாலன" என்னுமுறை தெளிவிக்கும்.