உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

25

அடிகள் எழுத்தில் ஆரியர் தமிழர் என்ற பிரிவை வளர்க்கும் கருவிகள் இருக்கின்றன. அவை மக்களின் ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும் என்பது எனது உட்கிடக்கை.

மறைமலை அடிகள் சமய நூல்களிலும் தத்துவ நூல் களிலும் புகுந்து ஆராய்ச்சி என்று வெளியிடும் கருத்துக் களை என் மனம் ஏற்பதில்லை. சமயமும் தத்துவமும் ஆராய்ச்சிக்கு எட்டாதன என்பதும் இவ்வாராய்ச்சி யால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் எனது எண்ணம். ஒருவர் பன் மனைவியரை மணக்கலாம் என்று அடிகள் அறைவது எனது நோக்குக்கு முற்றும் முரண்பாடு. ஒருவனுக்கு ஒருத்தி; ஒருத்திக்கு ஒருவன் என்பது எனது கொள்கை.

(வாழ்க்கைக் குறிப்புகள் : 168)

'சான்றாண்மைக்கு ஆழியாம்' இத்தகையரை - இத்தகையர் உரையை மதிப்பீட்டை 'அன்பர், நண்பர்' என்னும் கூட்டு கொண்டு தள்ளிவிட முடியுமோ?

(கா.சு. கண்ட புதுக்கருத்துக்களைப்) பழமை என்றே அவர் சொல்வர், அஃதெனக்கு வியப்பாகவே தோன்றும் என்பதில் தம் உடன்பாடின்மையைக் காட்டிவிடுகிறார் அல்லரோ திரு. வி.க.

(வாகு:189)

று

'தமிழர் சமயம்' மதிப்புரைகள் இணைப்பில் ஆனந்தனார், "தமிழர் சமய மாநாடு ஒன்று கூட்டப் போவதாகவும் அறிந்து மகிழ்ந்தேன்" என்று "இவர்கள் முன்னின்று தமிழர் சமய மாநாட்டைக் கூட்டின் பல பெரியோர்கள் கட்டாயம் ஒன்று சேருவார்கள். அதனால் நமது சமயக் கட்டம் புதுப்பிக்கப்படும். தமிழர் இழந்தபெருமையை மீண்டும் அடைவார்கள் என்பதே முடிவான நம்பிக்கையாகும்" என்று குறிக்கும் செய்திகளும் உள.

அனைத்திந்திய தமிழர் மத மாநாடு 1940 இல் சென்னை பச்சையப்பன் மண்டபத்தில் நிகழ்ந்தது. மாநாட்டு வரவேற்புரை 'தமிழ்க் கா.சு.' நிகழ்த்தினார். அவ்வரவேற்புரை தமிழர் தமிழர்