உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

மாக இனிய எளிய திருந்திய தமிழ்நடையில் இந்நூல்நிறுவிச் செல்வது தமிழர்க்கே தனிப்பட்ட ஒரு சிறப்பை யளிப்பதாகும்." - காழி. சிவ. கண்ணுசாமி.

இவையெல்லாம் நூலாசிரியர்மேல் அன்புடையாரும் மதிப்புடையாரும் எழுதியவைதாமே! அவர்கள் என்ன கருத்து மாற்றத்தை எடுத்துரைத்தோ கடுத்துரைத்தோ செல்வரோ என்பார் உளராகலாம். அவ்வாறு கருதுவார் மதிப்புரைத்த மக்களின் தகவு மதித்தறியாப் பான்மையர் எனக் கொள்ள வேண்டி வருமாம்.

"இந்நூலிற் கண்ட உண்மைகள் எல்லாம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுதல் வேண்டும் என்ற கட்டுப்பாடில்லை. எனினும், அவை ஆழ்ந்து கருதி ஆராய்ந்து துணிவுடன் வெளியிடப் பட்ட ஆராய்ச்சிக் கருத்துக்களாதலின் அவற்றைத் தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பரிந்தேற்றுப் படித்தல் தலையாய கடனாம் என்றும்,

"சிற்சில ஆராய்ச்சி பற்றிய கொள்கையில் கருத்து வேறுபாடு நிகழ்தல் இயல்பே. எனினும், இந்நூலில் சமய நெறி நின்று கடவுள் வழிபாடு செய்தல் வற்புறுத்தப் படுத்தலின் சமயப் பற்றுடை யோரால் இது விரும்பற்பாலதேயாகும்" என்றும் வருவன அப்படியே ஏற்பனவோ?

"அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரனாரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார்" என்று பாராட்டப்பட்டவர் மறைமலையடிகளார், பாராட்டியவர் திரு.வி.க.! தம் ஆசிரியராகவும் தம்மால் வணங்கத் தக்கவராகவும் கொள்ளப்பட்ட அடிகாளர் கருத்துகள் அனைத் தையும் அப்படியே ஏற்றுக் கொண்டாரோ? ஏற்றுக் கொண்டதாக நடித்தாரோ? அடிகளார் வாழ்ந்து கொண்டிருந்த நாளிலேயே எழுதினார்:

"மறைமலையடிகள் கருத்துக்கும் என் கருத்துக்கும் வேற்று மையுண்டா? இல்லையா? சிலவற்றில் உண்டு."

அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு; அடியேன் போக்கு வேறு. இரண்டுக்கும் சந்திப்பு உண்டாதல் அரிது.