உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

CC

தமிழ்க் கா.சு.வின் தமிழர் சமயம் ஓர் ஆய்வு

23

"திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளையவர்கள் தாம் வரைந்த தமிழர் சமயம் என்னும் நூலை மிகவும் நன்றாக எழுதி யிருப்பதுடன், தமிழரின் பண்டை நாகரிக வரலாறு களெல்லாங் கூடிய வரையில் நன்காராய்ந்து அடக்கி, இனி எதிர்காலத்திற்கு வேண்டுல் திருத்தங்களையும் செவ்வனே எடுத்துக்காட்டி விளக்கி யிருக்கின்றார்கள். யான் சென்ற 40 ஆண்டுகளாக ஆராய்ந் தெழுதியிருக்கும் என்னுடைய நூற் பொருள்களை அவர்கள் தழுவியே எழுதியிருத்தலால் அவர்கட்கும் எனக்கும் பெரும்பாலுங் கருத்து வேற்றுமை இல்லை."

மறைமலையடிகள்.

"தமிழர் தம்மை யறிவதற்கும் தமிழரை மதியாதுள்ள ஏனையநாட்டு மக்கள் தமிழரின் பண்டைய நாட்பெருமையை அறிந்து கொள்வதற்கும் வேண்டிய எல்லா உண்மைப் பொருள் களையும் சுருக்கி நெருக்கி எழுதியுள்ளார்கள்.'

- பண்டித எஸ்.எஸ். ஆனந்தம்.

"தமிழ் மக்கள்மாட்டுள்ள அளவிலா ஆர்வத்தால் இயற்றி யளித்த ‘ஆராய்ச்சியருங்கலப் பெட்டகம்' என்றே 'தமிழர் சமயம்' என்ற நூலை அறுதியிட்டுக் கூறலாம்."

“தமிழ் மக்கட்குச் சாத்திரமேது, சமயமேது, மொழியேது, நீதியேது, முறையேது, தலையேது என்று உறுக்கிக் கேட்டுத் தருக்கித் திரியும் பெருமக்கள் இன்னும் இலரோ? அதிலும் மேனாட்டு முறைப்படி ஆராய்ச்சிக் கண்ணாடி பூண்டு துருவித் துருவி ஆராய்ந்து, அத்துறைகளில் உண்மை கண்டவிடத்தும், தந்நலமன்றி மெய்ந்நலம் பேணாப் பெற்றிமையால், அதனை ஏற்க மறுக்கும் பேரறிஞர்களும் இலரோ?

"இலராதல் இல்லை; உளர்; ஒரு சிலரேனும் உளர். ஐயம் நிறைந்த அத்தகைய ஐயனார்கட்கும் ஆணித்தரமான விடையளிப் பதாகும் திரு பிள்ளையவர்கள் எழுதியுதவிய இவ்வொப்பற்ற ஆராய்ச்சி நூல்.

“அறிவுக்கலைகள், ஆராய்ச்சிக் கலைகள், கருவிக் கலைகள் கவின்கலைகள் எல்லாம் தமிழ் நாட்டுஅறிவுக் கனிகளிலிருந்து அகழ்ந்தெடுக்கப் பெற்ற முழு மணிகளே என்று அழுத்தந் திருத்த