உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

த.வே.உமாமகேசுவரனார், தவத்திரு மறைமலையடிகளார், பண்டித ஆனந்தனார், அறிஞர் காழி. சிவ. கண்ணுசாமியார் ஆகியவர்கள் இந்நூல் பற்றிய தத்தம் கருத்துகளை எழுதினர். அவை, 'மதிப்புரைகள்' என்னும் தலைப்பில் இடம் பெற்றன.

ஒரு நூலை தம் 'மதிக்கோல்' கொண்டு அளவீடு செய்யும் போது, நம் மதிப்புக்குரிய புலமையாளர்கள் செய்தமதிப்பீடுகளும் கைவயப்படுமெனின் பெருநலமேயன்றோ? அம் மதிப்புரைகளில் சில மணிகளை அகழ்ந்து இவண் வைக்கப்படுகின்றன:

"அவர்கள் எழுதுமெதுவும் அவர்களின் அகன்ற கல்வியும் மிகுந்த ஆராய்ச்சியும் விளங்க அமைந்திருக்கும்."

- சோமசுந்தர பாரதி.

"அந்நூலுள் யாண்டும் தங்கள் ஆற்றலும், அறிவும், ஆராய்ச்சித் திறனும் புலத்துறை முற்றிய கலையறிவும் ஒளிசெய்து விளங்குவதைக் கண்டேன்.'

99

- தூ. சு. கந்தசாமி

"சுருக்கமாக 'அறிவுக் களஞ்சியம்' எனவும், ஒழுக்கக் கருவூலம் எனவும், 'சமய நிலையம்' எனவும் சொல்லலாம்."

"இந்நூலில் 'சீர்திருத்தங்கள்' 'தமிழர் சட்டம்' என்ற பகுதிகள் என் மனத்தை அதிகமாகக் கவர்ந்து விசேட திருப்தி அளித்தவைகளாம்.'

-வெ.ப. சுப்பிரமணிய முதலியார்.

"சீர்திருத்தங்கள் என்ற பகுதியில் கூறப்பட்டுள்ள பலவும் இக்காலத்திற்கு ஏற்றனவும் பலராலும் விரும்பத் தக்கனவும் ஆம் என்னும் கருத்துடையேன்.

-ந. மு. வேங்கடசாமி நாட்டார்.

'காலக்கோட்பாட்டினால் ஆரியக் கொள்கைகள் நமது மெய்ந்நெறியை மாசுபடச் செய்தன. இவ்வுண்மையைத் தமிழறி ஞர்கள் நன்குணர்ந்து தமதுள்ளத்தே மதித்துக் கொண்டு ஆரியக் கொள்கைகளை விரைவில் களைத்தெறிந்து தமிழரின் சமய நெறிகளைத் தூய்மையாக்கும் கடப்பாட்டை இன்னே மேற் கொள்ளுதல் மிக மிக வேண்டப்படும்."

-த. த.வே.உமாமகேசுவரன்.