உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

97

சித்தாந்த ஆராய்ச்சி மிக்க அறிஞர்களும் அன்பர்களும் அங்கங்கே இருப்பார்கள். ஆதலால் செல்வி நேயர்கள் அன்பு கூர்ந்து அறிந்த வரையில் அவர்களைப்பற்றி அவரவர் முகவரி களுடன் திருநெல்வேலிக் கீழரத வீதிக் கழக நிலையத்துக்கு அறிவித்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்பன்

வ. திருவரங்கம் பிள்ளை

அமைச்சர்

மெய்கண்ட சாத்திர மாநாடு,

திருநெல்வேலி.

தொடக்க நாள் முதலாகக் கழக அமைச்சராக அமர்ந்து அரும்பணி செய்துவந்த திருவரங்கர் தம் பெயரால் வெளியிட்ட அறிக்கை இரண்டேயாம். அவற்றுள் ஈதொன்று, மற்றொன்று இசைத் தமிழ்க் கழக வேண்டுகோளாக வெளிப்பட்டதாகும். எஞ்சியவற்றிலெல்லாம் அமைச்சர்' என்னும்

குறியீட்டளவிலே அமைவது அவர்க்கு இயல்பாம்.

ம்

பதவிக்

ஐந்து நாள் திட்டத்தில் நடாத்தத் தீர்மானிக்கப்பெற்ற மாநாடு அதன் அரவணைப்பாலும் ஆர்வத்தாலும் ஏழு நாள்களாக வளர்ந்தது, இம் மாநாட்டைக் கூட்டியது ஏன்? ஆறாம்நாள் விழாவில் ‘மெய்கண்ட சாத்திர மாநாடு' என்னும் தலைப்பில் உரையாடிய சிறுமியர் உரையைக் கேட்போம் : மங்கை : மெய்கண்டாரும் அவர்வழி வந்த L மாணவரும் இயற்றிய நூல்கள் பன்னிரண்டுடன் அவற்றிற்கு முற்பட்ட உந்திகளிறு என்னும் இரண்டோடு 14 நூல் களும் ‘மெய்கண்ட சாத்திரம்' என்று பெயர் பெறும். புனிதா : அம் மெய்கண்ட சாத்திரத்திற்கும் இங்குக் கூடியுள்ள மாநாட்டுக்கும் என்ன தொடர்பு?

மங்கை : மேற்கண்ட சாத்திரங்களைப் பயில்வாரும் உணர் வாரும் தெளிவாரும் குறைந்துவரும் இக் காலத்து அவற்றின் பொருள்களையும் கருத்துகளையும் சைவ மக்கள் யாவரும் இவை என்று தெரிந்து மகிழுமாறே இம் மாநாடு கூடியுள்ளது.

புனிதா : இத்தகைய மாநாடு இதற்கு முன்னர்க் கூடியதில்லையே? இதனைக் கூட்டுவிப்பவர் யார்?