உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. 60TLILDIT60060 – 1

உழைத்து உழைத்துப் பழகியவர்களுக்கு உழைக்கமுடியாத லைமையே ஒரு நோய்; அதிலும், ஒரு நோயால் உழைக்க முடியாத நிலை உண் ாயின் அது மற்றொரு நோயை உண்டாக்கத் தவறாது. அந் நோய், உளநோயாகும்; உழைக்க முடியாமையால் உள்ளம் உடைந்துவிட்டால் சங்கச் சான்றோர் கூறுவது போல், ‘களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல' (நற். 284) உடல்நிலை ஆகிவிடத் தவறாதே! இரண்டு வலிய யானைகள் ஒரு தேய்ந்த பழைய கயிற்றை மாறுபட்டு இழுத்தால் எத்துணைப் பொழுது அந்தக் கயிறு அறுந்துபடாமல் தாங்கும்? இருபக்க உள்ளப் போராட்டம் உடலுக்கு ஆக்கஞ் சூழ உதவுமோ?

அரங்கனாரின் அயரா உழைப்பின் கடுமையால், விடாது நெஞ்சுவலி வருத்திக்கொண்டிருந்த காலையில், அவர், கருதியும் பாராத கடுவிளைவொன்று சூழ்ந்தது. அவர்தம் அருமைச் செல்வி, முதன்மகள், மங்கையர்க்கரசி பூத்துக்குலுங்கும் பூங்கொடியாய்த் திகழும் பன்னிரண்டாம் அகவையில் இயற்கை எய்தினாள்! ஆராத அன்பு, அம் மகள்மேல் கொண்டிருந்த அரங்கரை, அப்பிரிவு வாட்டியது. நொடி நொடியும் அவ் வருமைச் செல்வியின் அறிவும், அருமைப்பாடுகளும், எழில்மதி முகமும், இனிய முறுவரும் இடையீடின்றி நினைவுறுத்தி வருத்தின.

இப்பெரும் பிரிவு, மருமத்தில் பெரும் புண்ணாகி நலிக்கும் போதில் தம் ஈருடல் ஓருயிராகத் திகழ்ந்த அருமை மனைவி நீலாம்பிகையார் மிகுந்த உடல்நலக் குறைவுற்றார்! 1943ஆம் ஆண்டில் அம்மையார் ‘பெரும்பாடு' என்னும் நோயால் பற்றப்

பட்டார்.

முன்னமே பத்தாண்டுகள் இளைப்பிருமலினால் அல்லல் உற்றவர் அவர். அடிக்கடி மக்களைப் பெற்ற நலிவும், இராப் பகலாய் அவற்றை ஓம்பும் நலிவும் ஒருங்கே யுற்றவர். அவர்க்குக்