உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

101

மெய்கண்டார் மாநாட்டின் போது கலைச் செல்வர்களுக்குச் சிறப்புப் பட்டங்களும் பரிசுகளும் வழங்கினார் என்பதை முன்னே அறிந்தோம். அவ்வாறு பாராட்டப்பெற்ற ஒன்பதின் மருள் எழுவர் இசைக் கலைஞர்களேயாவர் என்பது குறிப்பிடத் தக்கது. அப் பெருமக்கள் பெயர்களையும் அவர்களுக்கு வழங்கப் பெற்ற பட்டங்களையும் அறிந்துகொள்வது திருவரங்கனாரின் இசைத்தமிழ் ஈடுபாட்டுக்கும், அதன் வளர்ச்சியில் கொண்டிருந்த ஆர்வத்திற்கும் சான்றாம்.

திருவனந்தை தி. இலக்குமணப்பிள்ளை

மயிலம் க. வச்சிரவேல் முதலியார் சிதம்பரம் செல்வரத்தினம்பிள்ளை

நெல்லை சா. சுந்தர ஓதுவாமூர்த்தி

சித்தூர் சுப்பிரமணியபிள்ளை

மேலகரம் சம்பந்த ஓதுவார்

வீரவனல்லூர் சுந்தர ஓதுவாமூர்த்தி

இசைக்கலை' ஆசிரியர்

இசைமணி'

இசைச்செல்வர்’

‘மறையிசைமன்னர்’

இசைமன்னர்’

'மறையிசைச் செல்வர்’ 'மறையிசைமணி'

பல்கலைக் கழகமோ, இசைக் கல்லூரியோ தரவேண்டிய பட்டங்களைத் தென்னிந்திய சைவ சித்தாந்த சங்கம் வழங்கு கின்றது. சைவ சித்தாந்த சங்கம் என்பது என்ன? சைவ சித்தாந்தக் கழகத்தின் ஓர் உறுப்புத்தானே! கழகம் ஒரு பல்கலைக்கழகம் என்றும், அதன் அமைச்சர் அரங்கர், துணைவேந்தர் நிலையில் நின்று பட்டம் வழங்கியுள்ளார் என்றும் கொள்வது தகும் அன்றோ! இவ்வாறு ஒருவகையிலோ முன்னோடியாக அரங்கர் திகழ்ந்தார்?