உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

வருவதை அன்பர்கள் நன்குணர்வர். தமிழிசையைப் போற்ற வேண்டுவது தமிழர்கள் கடமையன்றோ! இயல் இசை நாடகம் என மூன்றையும் முன்னையோர் முத்தமிழ் என்றே வழங்கி வந்திருக்கின்றனர். இதனாலேயே ஞானசம்பந்தப் பெருமானை முத்தமிழ் விரகர் என்று பாராட்டிப் பரவுவாராயினர். சங்க காலத்திற்குப் பின்னுள்ளவர்கள் இயற்றமிழையே பெரும்பாலும் போற்றவாராயினர். ஆதலால் இசைத் தமிழும் நாடகத் தமிழும் சிறிது சிறிதாகத் தளரலாயிற்று. அதனை யுணர்ந்து இசைத் தமிழையும் நாடகத் தமிழையும் வளர்த்தல் தமிழ் மக்களுடைய தலைமையான கடனாக இருக்கின்றது. ஆதலால்

பொருளாளர்களும் இச்செயலுக்கு

-

அறிஞர்களும்

-

இசைவாணர்களும்

உரிமையாளராகித் தமிழிசையே நன்கு வளரும்படி உதவிபுரிய மிகப் பணிவுடன் வேண்டுகின்றோம். உறுப்பினர் கையொப்பமிட வேண்டிய இதழை அடியிற் கண்ட முகவரிக்கு எழுதிப் பெறுக. அதிற் கையொப்பமிட்டுக் கையொப்பத் தொகையுடன் கீழ்க் குறித்த கழக முகவரிக்கு அனுப்ப வேண்டுகின்றோம். இதனைத் தங்கள் நண்பர்களுக்குந் தெரிவித்து அவர்களையும் கொள்ளும்படி செய்தல் நன்று.

ம்

முயற்சியிற்

கலந்து

1.

கா. சங்கரம் பிள்ளை

2. சு. தம்பா பிள்ளை

3. ரா. கனகசபாபதி பிள்ளை

4. பெ. திருப்பாற்கடனாத பிள்ளை

இசைத் தமிழ்க் கழகம்,

24, கீழ ரத வீதி,

திருநெல்வேலி.

தமிழ் இசைவாணர்கள் திருநெல்வேலி.

வ. திருவரங்கம் பிள்ளை

நிறுவிப்பவர்

இசைத் தமிழ்க் கழகத்தைத் தோற்றுவித்துப் பாடுபடத் துணிந்து அறிக்கை விடுத்த அரங்கர் அக் கழகம் உருவாகிக் கடனாற்றும் அளவும் வாளா அமையாமல் சென்னை மாகாணத் தமிழர் ஒன்பதாவது மாநாட்டை இசை மாநாடாகவே நிகழ்த்தினார். அம் மாநாடு நெல்லையில் 27-3-43, 28-3-43 ஆகிய நாள்களில் நிகழ்ந்தன. இந்து அறநிலைய ஆணையர் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் தலைமையில், திரு. பொன்னம்பலம் தியாகராசனார் தமிழ்ச்கொடியேற்ற, இசைத் தமிழ்ச் செல்வர் தி. இலக்குமணப் பிள்ளை தமிழிசை யரங்கு நடத்தினார்.