உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

44 இல் தம் இல்லத்துக்கு அம்பிகையார் அழைத்துவரப் பெற்றார்! அம்மையாரின் தீரா நோய்நிலையும் அதனால் அவர்படும் பாடும் அரங்கரை வாட்டின! இளங் குழந்தைகளின் சூழலும் அவற்றின் அவலமும் அசைத்தன! மேலும் மேலும் பெருக்கெடுத்து அலைக்கும் வெள்ளத்தை வள்ளத்தை ‘உப்புக் உப்புக் கரை’ எத்துணைப் பொழுதுதான் தாங்கிவிடும்?

தோனாவூரில் இருந்து திரும்பும்போதே சோர்வுடன் இருந்த அரங்கர், பாளையங்கோட்டைக்கு வந்து தம் வீட்டை அடைந்தும் அயர்ந்து படுத்தார். அப் படுக்கை, அவரை மீண்டும் எழுந்திருக்க விடவில்லை! தாழா நெஞ்சுவலித் தாக்கத்தில் வி அழுந்தினார். அண்ணல் அரங்கர், பாளையங்கோட்டையில் பட்டுக் கொண்டிருக்கும் பாடு, சென்னையில் இருக்கும் இளவல் வ. சு. விற்கு எப்படித் தெரிந்தது?

வ. சு. அவர்கள் உள்ளத்தில் அறிதற்கு அரியதோர் கலக்கம் எழுந்தது. சென்னையில் அவரால் இருப்புக்கொள்ள இயல வில்லை. ‘என்ன நிகழப்போகிறதோ?' என்ற பெருந்துயர் கப்பிக்கொள்ளப் பெற்றார். உடனே பாளையங்கோட்டைக்கு வந்தார்! வந்தவர், அண்ணல் நிலையைக் கண்டார். ஆறாத் துயறுற்றார். என்றும் ஆறாத்துயராக்கி விட்டுச் செல்லக் காத்திருந்த அரங்கர், தம் தம்பியார் மார்பில் சாய்ந்து கொண்டே செம்பொருளில் கலந்துவிட்டார்! அண்ணலாரைத் தாங்கிக் கொள்ளத்தான் சென்னையில் இருந்து அறிவிப்பு ஏதும் இல்லாமல் ஓடி வந்தாரோ இளையவர்! அண்ணலார் தோற்று வித்த கழகத்தையும், அவர் குடும்பத்தையும் தாங்குதற்கு உரியார் தம்பியரே என்பதை நிறைவுறுத்தத்தான் அண்ணல் அரங்கர் அவர் மார்பில் சாய்ந்துகொண்டே உயிர் துறந்தாரோ! எத்தனை நாள்கள்தாம் படுத்தார் அரங்கர்! ஒரோ ஒருநாள்! 28-4-44 பகல் முழுவதும் படுத்தார்! அன்றிரவு 9 மணிக்கு பிரிந்தார்!

அரங்கர் பிரிவு அம்பிகையை என்ன பாடு படுத்தி யிருக்கும்? அருமைத் தம்பியரை என்ன பாடு படுத்தியிருக்கும்? ன்னும் இளமக்களையும் ளமக்களையும் இனிய சுற்றத்தையும் எப்படி யெல்லாம் அலைக்கழித்திருக்கும்? முழபேரன்னை சுந்தரத் தம்மையார் எத்தகைய முட்டுற்றிருப்பார்? அறிஞர் பெரு மக்களையும் புலவர் பெருமக்களையும் எப்படியெல்லாம் புண்படுத்தியிருக்கும்? செந்தமிழ்ச் செல்வி - அவர் தோற்றுவித்து