உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

105

இருபத்தோராண்டுகளாக இனிதின் வளர்த்து வந்த எழிற் சல்வி-எத்துணைத் துயருள்ளாள்? அவள் துடித்த துடிப்பு தலைப்பாகி வெளிப்பட்டது! (சிலம்பு 21 : பரல் 6) :

66

அமைச்சர் திருவரங்கர் சிறந்த முயற்சி யேறு! அவர் கழகத் தந்தை; செந்தமிழ்ச் செல்வியின் தந்தை; பற்பல நூல் வெளியீடுகளின் தந்தை; இன்று அவையனைத்தும் தம் தந்தையை இழந்து நிற்கின்றன. தமிழ்நாடு மும்முரமான செய்கை வீரரை இழந்து நிற்கின்றது. 1890ஆம் ஆண்டில் இந்நாட்டிற் பிறந்து 54 ஆண்டுகள் முயற்சியோடு வாழ்ந்து அருஞ்செயல்கள் பல ஆற்றி 1944 நம்மினின்று விரைந்து பிரிந்து விட்டார்.

66

‘திருவரங்கர் செல்வரல்லர்; ஆனால், செல்வர் செய்தற்குரிய செயல்களைச் செய்து மெய்ச் செல்வராய் விளங்கினார்! திருவரங்கர் கல்வியாளருமல்லர்; ஆனால், கற்றோர் பலர் நாளுந் தாவுமாறு கல்வித் துறையின் பெருமுயற்சியாளராய்த் திகழ்ந்தார்! திறமையாளர் பலர் உலகத்தில் உள்ளனர். கருமமே கண்ணாய் ஓய்வு ஒழிவில்லா முயற்சியாளரும் உளர். ஆனால், நாட்டின் உயர்வகையான அறிவுநிலைக்கும் வாழ்க்கை நிலைக்கும் நிலையான முறைகளில் பணிசெய்யும் கலைத்துறை வீரர் எத்தனை பேர் உளர்!

66

ஒரு சிலர் நூலெழுதுவர்; ஒரு சிலர் நூல் பதிப்பர்; ஒரு சிலர் உரை எழுதுவர்; ஒரு சிலர் இனைய அறிஞர்க்கு உதவியாய் இருப்பர்; ஒரு சிலர் நூல் வெளியிடுவர்; ஒரு சிலர் விற்றுப் பரப்புவர்; ஒரு சிலர் மாநாடு கூட்டுவர்; ஒரு சிலர் சங்கங்கள் நடத்துவர்; ஒரு சிலர் கற்றோர்க்கு உதவுவர்; ஆனால் அனைத்தையும் ஒருங்கு செய்வித்துக்கொண்டு அனைத்திற்கும் அச்சாணியாய் விளங்கினார் திருவரங்கர்!

“செல்வரும் கல்வியாளரும் அலுவலுடையோரும் நிலைமிக்க வரும் இனைய செய்கைகளைச் செய்வது வியத்தற் குரியதாயினும் அஃதவர்க்கு இயலத் தகுந்தது. திருவரங்கனார் இக் கருவிகள் யாவுமின்றியே உயர்ந்த துறைகளில் பெருங் காரியங்களை நிகழ்த்தி வந்த அருமைப்பாட்டை என்னென்பது! உயர்ந்த எண்ணங்களும் நிறைந்த முயற்சியுமே அவர்மாட்டுச் செழித்திருந்த செல்வங்கள்! அவைதாம் ஆ! இவ்விருபதாம்