உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

நூற்றாண்டின்

உண்ட

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தமிழ்

ாக்கிவிட்டன!

வளர்ச்சிக்கு என்ன

முறுக்கத்தை

'திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்தக் கழகம் திருவாளர் திருவரங்கனாரவர்களின் நல் அறிகுறி! தமிழ்நாட்டின் தூய தமிழ் வளர்ச்சிக்கும் தமிழர்களின் எல்லா வகையான உரிமைகளின் அடிப்படைக்கும் அருள் வாழ்விற்கும் கழகம் சய்துவருகின்ற நிலைத்த பணிகளையும் கிளர்ச்சிகளையும் எண்ணினால் ல் திருவரங்கரின் ஏற்பாட்டுத் திறன் இனிது புலனாகும். தமிழ்நாட்டின் குழந்தைக் கல்வி முதல் முதியோர் கல்வி ஈறாக ஆண் பெண் இருபாலார் கலைத் துறைக்கும் கழகம் ஆற்றலோடு தொண்டு செய்து வருகின்றது. தமிழ்நாட்டுக் கூட்டுறவு முறையில் முதன் முதல் இங்ஙனம் தமிழ்க்கலைக்கு அமைந்த ‘லிமிடெட்' கழகம் இத் திருவரங்கனார் கழகமேயாகும்.

'திருவரங்கரின் முயற்சியினால் எத்தனையோ எழுத்தாளர்கள் அரும்பினர்; மலர்ந்தனர்; விளங்கினர்! எத்தனையோ புதிய நூல்கள் எழுந்தன; புதிய பதிப்புகள் எழுந்தன; அழகிய நூல்களாய் மாறின! ஆயிரக் L கணக்கான ஆண்டுகளாக உரையில்லாதிருந்த ‘அகநானூறு’ முதலிய தமிழ்நூல்களுக்கும், திருவாசகம்' முதலிய சைவ நூல்களுக்கும் புலமை மிக்க பேராசிரியர்களின் உரைகள் வெளிவந்தன. விற்பனையாகாமல் இருந்த தக்கோர் நூல்கள் பலவும் நாட்டின் மூலை முடுக்கு களிலெல்லாம் பரவிப் பயனும் பெருங்கிளர்ச்சியும் விளைந்தன. முயற்சியும் திறமையும் உடையோர் உலகத்தில் எவ்வகையிலும் வாழ்ந்து விளங்கிடுவர். அதுதானா பெரிது! திருவரங்கரின் திறமையான முயற்சி, தமிழ்நாட்டின் கலைத் துறைக்கண் சென்று பீடுநடை கொண்டதே ஈண்டுக் கருதத் தகுந்த பெருமையாகும். தமிழ்நாடு செய்த தவமென்றே அதனைக் கூறுதல் வேண்டும். அவர் இடத்தை நிரப்புதல் அத்தனை எளிதில் இல்லை.

"திருவரங்கனாரின்

எண்ணத்திலும் முயற்சியிலும் பயனிலும் சிறிதும் வறுமையே இல்லை. அவர் எத்தனையோ பெருங்காரியங்களைச் செய்ய எண்ணியிருந்தார். தமிழ்நாட்டின் அறிவு வளர்ச்சிக்கு அவரது பிரிவு அதனால் பேரிழப்பாயிற்று. நாடு மட்டுமன்று, கழகமும் குடும்பமும் அவரது பிரிவாற் கொழுகொம்பற்ற தளர்கொடி போல அலமந்து நிற்கின்றன.

وو