உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

107

செந்தமிழ்ச் செல்வியின் இப் புலம்பல் உண்மையில் செந்தமிழ் வாழ்வினராகிய மக்கள் அனைவரின் உண்மைப் புலம்பலாகவே வெளிப்பட்டது! எத்தனை புலவர்கள் வருந்தினர்; வதைந்தனர்; வாடினர்; எத்தனை கவிஞர்கள் கரைந்தனர்; கனிந்துருகினர்; கண்ணீர் வார்ந்தனர்; எத்தனை எத்தனை அன்பர்கள் அடியார்கள் நண்பர்கள் ஆறாத் துயருற்றனர்! அரங்கரின் அன்புத் தம்பியார் வ. சு. வின்மேல் பரிவும் பாசமும் காட்டிப் பரிந்து பரிந்து எழுதியவர் எத்தனைபேர்? அம்பிகையார் நிலைக்காவும் அவர்தம் இளமக்கள் எண்மர்க்காகவும் இரங்கி இரங்கி உருகி நின்று எழுதியவர்கள் எத்தனை பேர்? அரங்கனார் இருந்த காலையில் செய்த தொண்டுகளின் முழுமைப் பெருக்கும் ஒருங்கே வெளிப்படுத்தும் வண்ணம் ரங்கல் மாலைகள்'

வெளிப்பட்டன!

அரங்கர் இழப்பைத் தமிழன்னையின் ‘போகூழ்' என்று அறிஞர்கள் புலம்பினர்; 'தமிழன்னையின் இரு கண்களில் ஒரு கண் பறி போயிற்று' என்று புண்பட்டனர். ‘தமிழன்னை தன் கால்களுள் ஒரு காலை இழந்தாள்' எனத் தவித்தனர். ‘தமிழ் அன்னை தன் தளையறுமுன், தன் தனிச் சிறப்பமைந்த தனயனை இழந்தாள்' என இரங்கினர்.

‘கழகக் கற்பகம் தன் ஆணிவேரை இழந்தது' என்று அலமந்தனர். ‘கழகத்தின் உயிர் நாடி ஒடுங்கியது' என உருகினர். கழகப் பதிப்பின் கண்கவர் வனப்பைப் பாராட்டிப் பாராட்டி, அதற்கு வித்தாக இருந்த அரங்கரை நினைந்து வெதும்பினர்.

எவ்வாறு திரு. அண்ணியார் அவர்கள் உள்ளம் துடிக் கின்றதோ! குழந்தைகள் எங்ஙனம் கையற்று வருந்துகின்றனவோ! திரு. அன்னையார் அவர்களுடைய பெற்ற வயிறு எப்படி வெதும்புகின்றதோ! தங்கள் உடன் பிறந்த நெஞ்சம் எவ் வண்ணம் நைகின்றதோ!” என்று குடும்பத்தாரை நினைந்து குமைந்தனர். “உடன் பிறந்த தாங்கள் ஒரு தோளைப் பறிகொடுத்தீர்கள்; அன்னை நீலாம்பிகை தன் ஒரு நீங்கினார்” என்று நெட்டுயிர்த்தனர். ‘திலகவதியார் வரலாறு படைத்த அம்மைக்கு யாம் கூறுவது யாது?' என்றும், கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்' என்று மேற்கோள் காட்டி வருந்தினர். “இப்பிரிவு ஆறத் தக்கதும் இல்லை; ஆற்றத் தக்கதும் இல்லை” என்று ஆற்றாது அரற்றினர். “உடன் பிறப்போடு

கூறு