உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

தோள் வலிபோம்” என்றும், ‘உங்கள் பொறுப்பு மிகுதி' என்றும், ‘உங்கள் சுமை தாங்க வொண்ணாதது' என்றும் இளவல் வ. சு. அவர்கள் நிலைமைக்கு இரங்கினர்.

அரங்கனார் செய்த உதவிகளை தோன்றாத் துணையைத் தூண்டி எழுத வைத்த திறத்தை, விருந்தூட்டிய சிறப்பை - இன்ன பலவற்றை எடுத்தெடுத் தியம்பி இணைத்தவர் பலர். 'சான்றோம் மெய்ம்மறை’, ‘தமிழர் செல்வம்’, ‘தமிழ்ப் புலவர் தோழர்’, முயற்சித் திரு’, ‘தமிழுணர்ச்சிப் பெரியார்’, தனித் தமிழ்த் தாண்டர்', 'பழங்கலன் தூய வாக்கியவர்', 'புதுக்கலன் புதுக்கியவர்’, ‘கடமை வீரர்’, ‘தமிழகத்தின் தனித் தலைவர்’, 'பிறர் துயர் தாங்கும் பெருமான்’ “தமிழகம் முழுதும் புரந்த பெருந்திறல்’, ‘தமிழர் நன்னிலைக்கு அடிகோலிய அண்ணல்’, பேர் பெறும் வள்ளல்', 'தமிழ்க் கடவுள்' என்று புகழ்ந்து புகழ்ந்து புண்பாடுற்றனர் பலர். ‘கம்பீரத் தோற்றம்’, ‘சிங்க நோக்கு’, ‘அஞ்சா நெஞ்சம்’, பீடு நடை', பொறுமை இனியநகை அன்பு நண்பு அருள் இன்னபல இயல்புகளை எழுதி இரங்கினர் பலர். நீறு விளங்கிய நெற்றி, தாழ்வடம் தொங்கிய கழுத்து, அகமுக மலர்ச்சி, சொல் வணக்கம், சொல் விருந்து, முத்தன்ன எழுத்து-இன்ன

பலவற்றையும் எண்ணி மறுகினர் பலர். 'எவ்வளவு ஆற்றல்’?, ‘எத்துணை வீரம்?', 'எத்தகு முயற்சி?' - என்று வியந்துரைத்தாரும் பலர்!

"பேராசிரியர் பெருந்தகைமையும்,, பெரு நாவலர் சிறப்பும், முதுபெரும் புலமையும் பூண்டுள்ள எங்கள் மறைமலையடி களாரின் மருகராயிற்றே! எங்கள் தமிழ் பெருமாட்டி, புலவர் போற்றும் தனித்தமிழ்ச் செல்வி நீலாம்பிகையின் கணவராயிற்றே! வீறுற்ற தமிழரையெல்லால் ஒருங்கே திரட்டி ஒப்புயர்வற்ற கட்டுரை சொற்பொழிவு நூல் வெளியீடு இவற்றால் தமிழகம் ஓங்க நாளும் திருப்பணி பூண்டொழுகும் பெருந்தமிழ்த் தளபதி திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களின் தமையனாராயிற்றே!” என்றென்று இனஞ் சொல்லிச் சொல்லி ஏங்கினார் பலர்! ஆறுதலும் தேறுதலும் உரைத்து இயற்கை நியதியை எடுத்துக் கூறி அமைதி காட்டினாரும் பலர்! பண்ணாரும் பைந்தமிழ்ப் பாடலால் பட்ட பருவரலையெல்லால் பசைந்து பசைந்து எழுதிப் பரிந்திரங்கினாரும் பலர்.

பூ