உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. துன்பமாலை

2

திருவரங்கர் மறைவால் தமிழகம் ஒரு நற்றொண்டரை இழந்தது; சைவ சமயம் ஓர் அரிய அடியாரை இழந்தது; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தன் நிறுவனரை இழந்தது; நீலாம்பிகையார் தம் காதல் தலைவரை இழந்தார்! இளவல் வ. சுப்பையாபிள்ளை தம் முற்றேன்றலை இழந்தார்; இளஞ்சேய் களோ அரவணைத்த ஆருயிர்த் தந்தையை இழந்தனர்! மூதாட்டி சுந்தரத்தம்மையோ தம் அன்பின் வைப்பகமாம் அருமைச் செல்வரை இழந்தார்! இவ் விழப்பெல்லாம் இனி எங்கே தாக்கும்? எவரைத் தாக்கும்? தாங்கும் தவத்தைத் தாங்கி வந்த தம்பியார் வ. வ. சு. சு. வைத் தாக்கியது. எல்லாச் சுமைகளும் த் அவர்மேல் வீழ்ந்தன.

"இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்

குற்றம் மறைப்பான் உடம்பு

(1029)

என்று ‘குடிசெயல் வகை'யில் கூறும் வள்ளுவனார், அதற்கு ஓரெட்டுக்கு முன்னரே,

66

‘அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை’

99

(1027)

என்று சொல்லிய அருமைக்கே இ னாகிப் பிறந்தார் போலும் இளவலார்! அவருக்கு மட்டுமா அச் சுமை? அவருக்கு வள்ளுவர் வகுத்த வாழ்க்கைத் துணையாய் வாய்த்த, மங்கையர்கரசியார்க்கும் சேர்த்தே அச் சுமை ஏறியது! தம் அன்புத் தலைவரைப் பிரிந்து பாளையிலேயே பல ஆண்டுகள் அவர் உறைந்திருக்கவும் நேர்ந்தது! தலைவரோ சென்னைக்கும் நெல்லைக்கும் அலைந்த வண்ணமும், அடுத்தடுத்தும் அடுக்கடுக்காயும் வந்து கொண் டிருந்த நோய் நொடிகளுக்கு ஆட்பட்டுக்கொண்டும், எண்ணற்ற வேலைகளையும் குடும்பச் சுமையையும் தாங்கிக்கொண்டும் “நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே என்னும் மணிமொழியை நெஞ்சார நினைந்துகொண்டு கடமை புரிந்து வந்தார்.