உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

பதிகம் சொல்லித் திருநீறு பூசினால் சிறிது நோய் தணியப் பெறுகிறாள். இதோடு ஓயாமல் வயிற்றை வலிக்கிறதென்று தொல்லைப்படுகிறாள்.” 23-3-45.

66

அருமைச் செல்வன்.....தொல்லையோ மிகுதி. தங்கள் ருவேலைக்கிடையே யான் அவனைப்பற்றித் தங்கட்கு ஓயாமல் தெரிவித்து மனத்தைப் புண்படுத்த விரும்பாமலே இருந்தேன். அவன் அறிவுடையவன்தான். ஆனால் அறவே படியாமல் அலைந்தால் அவன் எப்படிப் பயன் பெறுவான்? 15 நாள்களுக்குள் சினிமாவுக்கு இருமுறை போயிருக்கிறான். ஓரடி அவனை அடித்தால் என்னைக் கடுமையாக அடித்துவிடுகிறான். ஏசினால் அதற்கு விடையாக இழிவாக ஏசுகிறான். அவனைத் தாங்கள் அடிப்பதாற் சிறிதும் பயனில்லை. அதுவும் எனக்குத் துன்பம்.

மயிலைக் கண்டாலும் பிடிக்கிறதில்லை. அவளிடம் ஓயாமல் சண்டை. அச்சமே தெரியாத இவ்விளமைக் காலத்தில் நாம் அவனை இப்படியே விட்டுவிடுவோமேயானால், பின்னர் அவனும் பயன்பெறாமல் நமக்கும் பெரிய அல்லல்களை விளைப்பான் என்பதில் ஐயமுண்டோ?

“யான் என் அறிவறிந்த நாள்முதல் சிவபிரான் அருளால் பெரும்பாலும் கல்வித்துறையிலேயே, கவலை மிகுதியாயின்றிக் காலங்கழித்து வந்தேன். தங்களருமைத் தமையனாரவர்களாலும் நலமே பெற்றேன். ஆனால் என் பழைய ஊழ் ஒன்று மிகக் கொடியது. அஃதே..... என்னிடமிருந்து அவன் தங்கள் போன்றோரிடம் இருப்பனாயின் அவன் எல்லாரும் விரும்பத் தக்க நிலையில் நடப்பான் என்பதில் பின்னடைவில்லை. அவனுக்குத் தாங்கள் கடிதம் எழுதுவதாலும் அவனை அடிப்பதாலும் சிறிதும் பயனில்லை. அவனை என்னினின்றும் பிரித்துச் சென்னையில் கல்விபயில விடுவதே தாங்கள் அவனுக்குச் செய்யும் தந்தை உதவியாகும். பெண்மக்களால் பெரிய அல்லல் இல்லை என்றெண்ணுகிறேன்.

26-3-45

“யான் பிறந்த வீட்டை நினைக்கும்போது என் உள்ளம் அமைதியிலதாகின்றது. எழுதுவதும் பயில்வதுமே எனக்கு ஆறுதல். அதற்குக்கூடத் தடையாகப் பிள்ளைகட்கு அடிக்கடி நலக்கேடு.

சிவமணிக்குக் கையில் சிரங்கு, வீக்கம், மிகுதியும் தொல்லைப்படுகிறாள். அருமை மங்கை முன்னாளிரவு