உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

தந்துவிடுமோ?

அதுவும் நலிந்துபோய்

115

நாளெண்ணிக் கொண்டிருந்த உணர்வுப் பிழம்புக்கு அமைதி தந்துவிடுமோ? தம் அருமைக் கொழுந்தனார்க்கு உருகி உருகி எழுதிய உரைமணி களில் சில கேட்போம் : உருக்கமிக்கவர்கள் அழுது அழுதே அவனடி அடைய வேண்டுவதே ஊழ் போலும்!

தொடர்ந்தெழுதிய

கடிதங்களிலிருந்து பொறுக்கி

எடுத்தவை இவை; விடப் பெற்றவையோ மிகப் பல :

66

பல:

"அருமை அத்தை அவர்களுக்கு இன்னுங் காய்ச்சல் விடவில்லை. குளிர் காய்ச்சல் என்று மருந்து கொடுத்திருக் கிறார்கள்.'

وو

66

5-1-45

அருமைச் செல்வன் சல்வன் ஆவுடையப்பனுக்கு யப்பனுக்கு முட்டில் அடிபட்டு மிகுதியாய் நடக்க முடியவில்லை” 7-1-45

66

'அருமை அத்தை அவர்களுக்கு காய்ச்சல் விடவில்லை. நேற்றிலிருந்து தெளிநீருங் கூட மிகக் குறைவாகக் குடிக்கிறார்கள். தளர்ச்சி நாளுக்கு நாள் மிகுதியாக இருக்கிறது. அவர்களை மிக அன்போடு கருத்தாகப் பார்த்து வருகிறேன். ஆண்டவன் அருள் தான் வேண்டும். அவர்களைத் தூக்கித்தான் தண்ணீர் கொடுத்தல் வேண்டும். எழுந்திருக்க முடியவில்லை."

9-1-45

‘ஆவுடையப்பன் உள்ளங்கையில் ஒரு கொப்புளம் வந்து தொல்லைப்பட்டு நேற்றிலிருந்து சலம் வெளியாயிற்று. மயிலுக்கு இடுப்பு. தொடையில் சிரங்கு, தொல்லைப்படுகிறாள். மருந்தும் போடுகிறாள்.” 18-2-45.

"கவலை ஏதொன்றும் நினையாமல் வீட்டு வேலை நேரந் தவிர மற்ற நேரங்களில் ஓயாமற் படிப்பதும் எழுதுவதும் ஆண்டவனை வணங்குவதும் பிள்ளைகளை உன்னிப்பதுமாகக் காலங் கழித்து வருகின்றேன்” 27-2-45.

66

ஒரு கிழமையாக ஆவுடையப்பனுக்குக் கடுமையான காய்ச்சலாக இருந்து சிவபிரான் அருளால் அவனுக்கு நேற்றிருந்து நலம்.” 5-3-45.

66

மூன்று நாள்களாக நம் அருமைச் சங்கரிக்கு மேல் முழுதுந் தடிப்பு. இது ஒரு வகையான வைசூரியாம்; இன்னும் இறங்கவில்லை. பெரிதும் தொல்லைப்படுகிறாள். திருநீற்றுப்