உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

“திருவரங்கனாரின் அரும் பெருந் தொண்டினையும் அவர் தம் குடும்ப நிலையினையும் அறிந்து தம் கடமையுணர்ந்து கழகத் தலைவரவர்கள் அம்மையார் குடும்பத்திற்கு இயன்றவரை உதவிகள் செய்து வருவது தமிழ்மக்களின் பாராட்டுதலுக்குரிய தாகின்றது” (நீலாம்பிகையார் வரலாற்றுச் சுருக்கம்)

நீலாம்பிகையார் பெற்ற மக்கள் பதினொருவர்; அவருள் இருந்தவர் எண்மர்; அவருள், ஆடவர் இருவர்; மகளிர் அறுவர்; அவர்கள்: ஆவுடையப்பன் (வயிர முத்து), திருநாவுக்கரசு; சுந்தரம் (மயில்); முத்தம்மாள் (பாப்பா); வேலம்மாள், சிவசங்கரி, பிச்சம்மாள், மங்கையர்க்கரசி என்பார்.

எட்டுக் குழந்தைகளும் அடுத்தடுத்துப் பிறந்த குழந்தைகள். ‘குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்' என்பதை முழுமையாக உணர்ந்து உருகி இன்புற்றவர் தாம் அம்பிகையார். தம்மைச் சூழக் குழந்தைகள் படுத்திருக்க, அவர்கள் முகத்தைப் பார்ப்பதில் பூரித்துப் போவார் அவர்! பிள்ளைகளின் கன்னத்தைத் தடவி உச்சி முகந்து உவகை கூருவதுடன், கன்னத்தைக் கிள்ளிக் கிள்ளிக் கிளுகிளுப்பு அடைவாராம் அம்பிகையார். அக் கிள்ளிய தடங்களும்

பிள்ளைகளின் முகத்தில் அன்பின் 'பதிப்பகமாக' விளங்கிக் கொண்டிருக்குமாம்! ஓடி விளையாடி உவகையால் நகைத்து மகிழும் மகிழ்ச்சிக் கொள்ளையிலே, ஒரு தாய் எப்படியெல்லால் சொக்கிப்போய் மயங்கிப் போய் நிற்க க முடியுமோ அப்படியெல்லாம் நின்றார். ஆனால், அக் குழந்தைகள் தொடர்ந்து ஒன்றும் இரண்டும் மூன்றும் பலவும் படுக்கையில் கிடந்து நோய் நொம்பலங்களில் அழுந்தி அரற்றி அழுகைக் காடாய்க் கிடந்துவிடக் காணுங்காலை அப் பெற்ற மனம் என்னென்ன பாடுபடும்? புறத்தே அழும் குழந்தைகளுக்கு அகத்தே அழுது அழுது வெம்பி வெதும்புமே தாயுள்ளம்! அந் நிலை ஒரு நாள் இரு நாள் அன்றிப் பல நாள், சில திங்கள் தாடர்ந்தால், அத் துயரால் ஊணும் தவிர்ந்து, உறக்கமும் இழந்து, ஓய்வும் ஒழிந்து, மனமும் நைந்துபோகும் நிலை படை படையாய்ச் சூழ்ந்து தாக்கினால் பெற்ற மனம் என்னாகும்? தமக்கு உதவியாய் இருந்த முதியவரும் நோயில் படுத்துவிட்டால் சொல்ல வேண்டுமா? அந்தோ! அரங்கர் பிரிவுக்குப் பின்னர் அவர்தம் அருமை இளவல் வ. சு. தம் குடும்பத்தைத் தாங்கும் காவல் தெய்வமாய் அமைந்தாலும், அவர்தம் அருமை மனைவியார் மங்கையர்க்கரசியார், தாம் பெறாது பெற்றெடுத்த பிள்ளைகளெனப் பேணிப் புரந்தாலும் முழு ஆறுதலைத்

ரு