உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

அம்மையார் உள்ளம் ஒருவேளை மக்கள்மேல் சலிப்புற்ற தில்லை எனினும், அம் மக்களைப் பேணுதலில் உடல் நலத்தைக் கெடுத்து, இயல்பாகவே நோயுற்ற உடலை மேலும் வாட்டித் தீராநோய்க்கே தம்மை ஆட்படுத்திக்கொண்டு விட்டார் என்றே கருதவேண்டியுளது. தம் கணவரின் இனிய இளவலார் வ. சு. அவர்களின் அருமை மனைவியார் மங்கையர்க்கரசியார் தமிழரசியைப் பெற்றபோது எப்படிப் பூரித்துபோய்ப் பாராட்டுகிறார் நீலாம்பிகையார்!

وو

66 என் அருமை மகள் தமிழரசி நந்தமிழ்நாட்டின் பருநலத்திற்காகப் பிறந்திருக்கிறாள். ஆகலால் பெருமகிழ் வடை க என்பது அவர் தம் எழுத்து. குடிக்கு விளக்காகிய மகப்பேற்றை நாட்டின் நலத்திற்குப் பிறந்த பிறப்பாக நயந்தேத்திய நாகையார் உள்ளம் பெரிதேயாம். பெருஞ்சேரல் இரும்பொறை தான் பெற்ற மகனை இவ்வுலகோர் நலங்கருதிப் பெற்றான் என்று கூறும் அரிசில்கிழார் திருவாக்கிற்கு (பதிற்றுப் பத்து. 74) அரணென அமைந்து திகழ்கிறது அம்பிகையார் வாக்கு! அத்தகைய வாக்குடையார், ‘புண்பட்ட என்னுள்ளம் மேலும் மேலும் புண்படுகிறது' என்றும் ‘என் உடல் நலமுங் கெடும் என்பதில் ஐயமில்லை' என்றும் ‘மன ஆறுதல் பெற நல்வினை செய்தேன் இல்லை' என்றும் வருந்து நிலை எதனால் உண்டாயது? அறிவு நலங் கூர்ந்தார் எண்ணிப்பார்ப்பாராக.

மங்கையர்

கூட்டத்தில், மாநாட்டில், மாநாட்டில், பேரவையில், கருத்தரங்கில் பங்குகொண்ட அம்பிகையார், வீட்டுள் அடங்கிப் போனார். கூட்டத்திற் பங்கு கொள்வதற்கேயன்றிக் கேட்டதற்குச் செல்லும் அமைதியையும் இழந்தார். திருக்கோயில் வழிபாட்டுச் செல்லவும், சமயப்பொழிவும் ஒடுங்கின. அவரைக் கைம்மைக் கோலத்திலே கண்டு உருகியவர் மிகப் பலர். அறிவறிந்தோர்க் கல்லாம் அறிமுகப்பட்டிருந்த அடிகளாரின் திருமகளார், அரங்கரின் துணைவியார், அம்பிகையாரைத் தமிழ்ப்பற்றாள ருள்ளும் சமயப்பற்றாளருள்ளும் எவரே அறியார்? அவரை அந் நிலையில் ஒரு சமயப் பொழிவுக் கூட்டத்தினிடையே கண்டு கண்ணீர் வடித்து நாத் தழுதழுத்தது வெதும்பி நின்றார் அவர் உடன் பிறந்த மறை. திருநாவுக்கரசர். அக் கோலத்திலே கண்டுகொண்டு உரையாற்றவும் இயலா உளத்துயரை எடுத்துரைத்தார். “பிறர் கூட்டத்திற்கு வந்து கேட்கும் மனமும் வற்றிப்போன யான், ஒரு சிறிது ஆறுதல் பெறுதற்காகவேனும் உன் பொழிவைக் கேட்கலாம் என வந்தேன்; என் பொல்லாத