உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

119

வேளை அதனையும் தடுக்க ஏவுகின்றது” என்று வருந்தினார். உணர்வாளராய்ப் பிறப்பதில் எத்தனை எத்தனை அல்லர்கள் வாழ்வில்?

அம்பிகையாரின் இறுதிக்கால வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார் மறை. திருநாவுக்கரசர் :

66

அரங்கனாருக்குப்பின் அம்மையார் வாழ்வு ஒருவாறு அமைதியாக நடந்துகொண்டிருந்தது. 8-10-45இல் சுப்பையா பிள்ளை பாளையங்கோட்டையில் இருந்து (சென்னைக்குச்) சென்றார். 10-10-45 இல் அம்மையார் காய்ச்சல் என்று படுத்தார். காய்ச்சல் ஒரு கிழமையாகியும் தணியவில்லை. வெம்மையளவு 104 ° வரையில் உயர்ந்தது. 102 °-க்குக் குறையவில்லை. இஃதறிந்து வருந்திப் பரபரப்புடன் சுப்பையாபிள்ளை 20-10-45 இல் பாளை மீண்டார். அறிவும் உலகியல் உணர்வும் வயதும் நிறைந்த டாக்டர். திரு சோமசுந்தரம்பிள்ளை அவர்கள் அம்மையாரைத் தம் அருமை மகளென அன்புடன் விழிப்பாய் உன்னிப் பார்த்தார். தக்க மருந்துகள் கொடுக்கப்பட்டன. காய்ச்சல் தணியவில்லை. அம்மையார் நம்பிக்கை இழந்தார்.

L

‘என் தம்பி மறை. திருநாவுக்கரசுக்கும் அவன் மனைவிக்கும் வருமாறு தந்தி கொடுங்கள்' என்றார். சுப்பையாபிள்ளை அனலிற் பட்ட புழுவெனத் துடித்தார். 24-10-45 இல் மறை. திருநாவுக்கரசின் மனைவியார் அறிவம்மையார் பாளையங் கோட் ட போந்து அம்மையாருக்கு இரவு பகலாகப் பணிவிடை புரிந்து வந்தார். அம்மையாரின் பெற்றோர்க்கும் உட ன்பிறந்தார்க்கும் அன்றன்று காய்ச்சல் நிலைபற்றிக் கடிதப் போக்குவரவு நிகழ்ந்துகொண்டே இருந்தது. எங்கும் கவலையும் கலக்கமும் அச்சமும் குடிகொண்டிருந்தன. 'கவலைக்கிடமா யிருக்கிறது புறப்படுக' என்று தந்தி கிடைக்கவே 3-11-45 பிற்பகல் பாளைசென்று மறை. திருநாவுக்கரசு தம் அருமைத் தமக்கையாரைக் கண்டார். காய்ச்சலுடன் இருமல்; இருமல் சளியுடன் இரத்தம் கொட்டல், இவற்றுடன் 4-11-45இல் இருந்து கைகால்களை அசைத்தல், எழுந்து உட்கார நடக்க முந்துதல் முதலியனவும், இடை இடையே இரண்டொரு சொற்கள் உணர்விழந்தும் பேசுதல் ஆகிய செயல்கள் அம்மையாரிடம் காணப்பட்டன. அன்று மாலை அனைவரையும் அழைத்தார். மைத்துனரைப் பார்த்து, 'இனி யான் பிழைக்கமாட்டேன்; என் மக்களை அன்புடன் பாதுகாத்தல் வேண்டும். எனக்கு உயிர்விட விருப்பமில்லை. பிள்ளைகளுக்காக வாழவே விரும்புகின்றேன்.

பஅ