உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

ஆனால் சிவபிரான் அழைக்கின்றான். நான் என்ன செய்வது?' என்று இயல்பாகச் சொன்னார்.

மறை. திருநாவுக்கரசு, அறிவம்மை, சுப்பையாபிள்ளை மனைவி, தம் மாமியார் முதலியோரிடமும் தம் மக்களை அன்புடன் பாதுகாக்க வேண்டுமென வேண்டினார். மக்க ளெல்லாரையும் பெயரிட்டழைத்துப் பேசினார். முத்தமிட்டார். இரவு 9 மணி. அம்பலவாணன் படத்தைக் கொண்டுவந்து தம்மருகே மாட்டச் சொன்னார். அதற்குப் பூ அணியச் சொன்னார். அவை செய்யப்பட்ட

66

ன.

வணங்கினார். எழுந்து உட்கார்ந்து, 'புண்ணியனே! உன்னடிக்கே போதுகின்றேன்; பூம்புகலூர் மேவுகின்ற புண்ணியனே' என்று திருத்தாண்டக அடிகளைக் கூறினார். 'அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே!” என்று திருவாசக அடிகளைக் கூறி இறைஞ்சினார். அதற்குமேல் பேசல் அவரால் இயலவில்லை. இரவு மணி 1. தமக்குப் பணி செய்துகொண்டிருந்த தம்பியைத் தேவாரம் பாடுக என்றார். இரண்டு மணிக்கும் அவ்வாறே கூறினார். அவர் பாடினார். இரவெல்லாம் உறக்கமே இல்லை. கைகால்களைப் புரட்டிக் கொண்டும் வருந்திக்கொண்டும் இருந்தார். பொ பாழுது விடிந்தது. தாம் பிழைத்தல் இயலாது என்றார். விரைவில் இறப்பேன் என்றார். பிள்ளைகள் எல்லாரையும் அருகழைத்து னிமையாகப் பார்த்தார். முத்தமிட்டார்.

5-11-45 திங்கட்கிழமை பகல் 11 மணிக்கு அம்மையார் இறப்புத் துன்பத்திற்கு ஆளானார். உடனே மறை. திருநாவுக்கரசு அம்மையார் அருகமர்ந்து அவர் தலைமீது திருவாசகத்தைப் பொருத்தி வைத்து, அதிலுள்ள பாடல்கள் பலவும் தேவாரத் திருமுறைகளிலுள்ள பாடல்கள் பலவும் பாடினார். உடற் புரட்டலும் கைகால் இழுப்பும் மிகுதியாகியும் அம்மையார் பாடல்களை மிகவும் உன்னிப்பாய்க் கேட்டார். தாமும் 'அம்மையே அப்பா' என்ற திருவாசகத்தில் பாதியளவு பாடினார். மணி 12. தம் மக்களை விழித்துப் பார்த்தார். மறை. திருநாவுக்கரசு ‘அக்கா, இந் நேரத்தில் மக்களை நினைத்தல் ஆகாது. கூத்தன் திருவுருவத்தையே நினைத்தல் வேண்டும்' என, அம்மையார் ‘ஆம்' என்று சொல்லிக் கூத்தன் படத்தைத் தம் இரு கைகளாலும் பற்றி மார்பு மீது வைத்துக்கொண்டு சிறிது நேரம் பார்த்தார். அது வாங்கிக்கொள்ளப்பட்டது. கடைசியில் அம்மையாரின் வாயினின்றும் ‘திருநீறணிக' என்றும், 'சிவ'