உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

121

என்றும் சொற்கள் வந்தன. நீறணிவிக்கப்பட்டது. கைகளால் வணங்கினார்.

பிறகு அம்மையாரால் பேசல் முடியாது போயிற்று. மறை திருநாவுக்கரசு 'சிவாயநம', 'நமச்சிவாய' ‘அம்மையப்பா' அம்பலவாணா’ கூத்தா' என்ற திருப்பெயர்களை உயர்ந்த குரலில் ஆர்வம் ததும்ப முழங்கிக்கொண்டே இருந்தார். அம்மை யார் அவற்றுக்கெல்லாம் ‘ஊங்காரம்' கொடுத்துக் கொண்டே இருந்தார். 12 3/4 மணி. அதுவுமியலாது போன போது திருப் பெயரொவ்வொன்றற்கும் தலையசைத்தார். 1 மணி. அப்போதும் சிவன் பெயர்களைக் கேட்டது கட்குறிப்பால் அறியலாயிற்று. 1.10 மணிக்குக் கண்களை மூடினார். சிவன் திருப்பேர் ஒலியுடன் அம்மையார் ஆருயிர் சிவன் சேவடியில் 1.16 மணிக்குக் கலந்தது. அன்று மாலையே (5-11-45) அம்மையாரின் திருவுடன் சிவபிரானின் பொங்கழல் உருவில் சேர்க்கப்பெற்றது. 15-11-45 இல் இல்லத்திலேயே வீண் சடங்குகள் எல்லாம் நீக்கித் தீ வளர்த்தும் திருமுறை ஓதியும் சிவவழிபாடு செய்யப்பெற்றது அம்மையார் வழிபாடும் ஆற்றப்பெற்றது.

وو

28-4-1944இல் இறையடி எய்தினார் திருவரங்கர். 5-11-45 ல் இறையடி எய்தினார் நீலாம்பிகையார். திருவரங்கர்

.

இளவல் வ. சு. அவர்கள் தம் தமையனார் அண்ணியார் செய்த திருப்பணிகளை எண்ணி உலகம் மறவாது இருக்கப் பண்டை யோர் கண்ட முறையில் நடுகல் விழா நடத்தினர்.

பீடும் பெயரும் எழுதுதல், நடுகற் குறிப்பு! செயற்கருஞ் செயல் செய்த செம்மலர்களுக்கு நினைவுக் குறியாக நிறுத்தப் பெறுவது நடுகல்! பல்லோர் பார்வையும் படும் இடத்தில் பீடும் பெயரும் எழுதப்பெற்ற கல்லை நடுதலும், வழிபாடு செய்தலும் வாழ்த்துதலும் காவியப் புகழ் வாய்ந்த செய்திகள். அவற்றுக்குக் காட்டாகச் செய்யப்பெற்ற பெருமை மிக்க நிகிழ்ச்சி இஃதாகும்.

8

12-8-46ஆம் நாள் வெள்ளிக் கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள், பொருநைக்கரை சார்ந்த, பாளையங்கோட்டை வள்ளைக் கோயில் தோப்பில், பாளையங்கோட்டை நகர் மன்றத் தலைவர் திரு. பி. டி. சுப்பையாபிள்ளை பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் நடுகல் விழா நிகழ்ந்தது.

5

13-8-46ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பாளையங்கோட்டை பெருமாள் கோயில் தெரு, நகரவைப் பெண்கள் பள்ளியில், திருவாளர் சி. சண்முக நயினார் பிள்ளை