உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

பி.ஏ., பி.எல்., அவர்கள் தலைமையில் நினைவுக் கூட்டம் நிகழ்ந்தது.

நினைவுக் கூட்டத்தில் இருபெருங் காதலராம் திருவரங்கர்- நீலாம்பிகையார் அருந்தொண்டுகள் பற்றி அறிஞர்கள் சி. இலக்குவனார், ந. சேதுரகுநாதன், குருசு அந்தோணி, ந. சிவகுருநாத பிள்ளை, மறை. திருநாவுக்கரசு, ஆ. முத்துக்குமார சாமி பிள்ளை, சிவகாமி அம்மையார், மு. இராசாக் கண்ணனார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். தேவாரம் இடைஇடையே ஓதப்பெற்றது. திரளான பொதுமக்களும் பேரறிஞர்களும் அன்பர்களும் உற்றார் உறவினர்களும் நினைவு விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தம் பேரன்பைப் புலப்படுத்தினர்.

ன்

அம்பிகையார் பிரிவுக்கு ஆறாத்துயருற்று இரங்கல் தெரிவித்தோருள் ஒருவர் தமிழ்த்திரு இளவழகனார். அவர் தவத்திரு. அடிகளார் மாணவர்; நீலாம்பிகையார் உடன் பயின்றவர். அவர் இரங்கல் செய்தியிடையே ‘நினைவுக்குறி’ பற்றி நினைவுறுத்தினார் :

"தனித்தமிழ் அன்னையாரான திருவாட்டி நீலாம்பிகை யம்மையார் அவர்களின் இரங்குதற்குரிய மறைவு தெரிந்து உள்ளம் உன்னுதொறும் இன்னதென்றறியாததோர் உரிமை யுணர்ச்சியினால் இழுதாகின்றது. ஆசிரியர் மறைமலையடி களிடத்தில் யானும் அவர்களும் உடன் பிறந்தாரைப்யொப்ப ஒரு சாலை மாணவராய்ப் பழகினோம். அதனாலும், தனித்தமிழ் உணர்ச்சியினாலும் யான் எனது வாழ்க்கையில் முதன்மையாகத் தொடர்பு பெற்றிருந்த என் அலுவலகத்தின் இல்லத் தலைவியார் என்னும் மதிப்பாலும், இத்தகைய உரிமையுணர்ச்சி எனதுள்ளத்தைக் கவர்ந்து நினைதொறும் உருக்குகின்றது. யானும் இதனால் ஆறுதல் காணாதே அலமருகின்றேன்.... ஆற்றாமையுடையார் உரை ஏனை ஆற்றாமை யுடையார்க்கு ஓர் ஆறுதல் அளிப்பது உண்மையாயின், அஃது அதனை

அளிப்பதாகவென நினைக்கின்றேன்.

66

'தமிழகத்தில் தனித்தமிழ் அன்னை, சைவத்தாய், பல நல்ல நூல்கள் இயற்றிப் பெருந்தொண்டு புரிந்த அருள் தலைவி, திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் ஒருவரே. அவரது வாழ்க்கையும் மறைவும் தமிழ் வரலாற்றிற்குரியவை. அவர்தம் கணவனார் வாழ்க்கையும் பிரிவும் அத்தகையனவே. அவ்விரு வருக்கும் ஒருமிக்க நினைவுக் குறிகளும் வரலாறுகளும் அமைப்பது இன்றயமையாதது.