உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

123

1946இல் நடுகல் எழுப்பப்பெற்றது; தனித்தனியே சிறிய

அளவில் வரலாறுகளும் எழுதப்பெற்ற.ன இப்பொழுது இருவருக்கும் இணைந்த வரலாறு சற்றே விரிந்த அளவில் இந் நூலாகின்றமை நினைவு கூரத்தக்கது.

திருவரங்கர் நடுகல்லில் பொறிக்கப்பெற்றுள்ள செய்தி :

66

இங்கமர்ந்துள்ள திருவரங்கம் பிள்ளை 23-5-1890இல் பாளையங் கோட்டையில் வயிரமுத்துப் பிள்ளை சுந்தரத் தம்மையார்க்கு மகனாகப் பிறந்து, 1906 முதல் 1918 முடிய, காழும்பில் தமிழும் சைவமும் வளர்த்து, 22-9-1920இல் திருநேல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவி, ஆயுள் அமைச்சராயிருந்து எண்ணற்ற அருந்தமிழ் நூல்களை ஒப்பற்ற முறையில் பதிப்பித்து, பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் எருமைக் கடாப்பலியை நிறுத்தி, நீலம்பிகையம்மையாருடன் இன்ப வாழ்வு வாழ்ந்து 28-4-1944இல் சிவனடி சேர்ந்த செந்தமிழ்ப் புரவலர்.'

நீலாம்பிகையார் நடுகல்லில் பொறிக்கப்பெற்றுள்ள செய்தி :

66

ங்கமர்ந்துள்ள நீலாம்பிகையம்மையார் 3-6-1903இல் நாகப்பட்டினத்தில் மறைமலையடிகள் சௌந்தர வல்லியார்க்கு மகவாகப் பிறந்து, சென்னை வித்யோதயா, நார்த்விக் மகளிர் பள்ளிகளில் தமிழாசிரியராயிருந்து 1919இல் தனித் தமிழியக்கங் கண்டு, 2-9-1927இல் திருவரங்கனாரை மணந்து, தனித்தமிழ்க் கட்டுரைகள், வடசொற்றமிழ் அகர வரிசை முதலிய பத்து நூல்களை இயற்றித் தமிழும் சைவமும் வளர்த்துப் பாளையங் கோட்டையில் வாழ்ந்து, 5-11-1945இல் மக்கள் எண்மரை விடுத்துச் சிவனடி சேர்ந்த செந்தமிழ்ப் புலவர்.”