உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

125

பொறுப்பாளராய் இருந்து அடிகளாரை அழைத்துப் பயன் கொள்ள விழைந்தாரும் பலர் இருந்தனர். அடிகளார் தொண்டுக்கு உதவும் வகையில் புரவலராகப் பொருந்தியவரும் பலர் இருந்தனர். இவ் வகையில், எவ் வகையாலும் அரங்கர்க்கும் அடிகளார்க்கும் தொடர்பு ஏற்பட வாய்ப்பு இல்லை!

இளமையிலேயே தந்தையாரை இழந்து, அத் தந்தைக்குப்

பின் ன் குடும்பத்தைத் தாங்கும் வறிய குடும்பத் தலைமையாய் இருந்து, படிப்பை விடுத்து, வேலை தேடி ஊரூராய் அலைந்து, கடல் கடந்து சென்றும் கடமை மறவாமல் தொழில் தேடிக், குடிநலம் பேணித் தீரும் கட்டாயத்திற்கு ஆட்பட்ட பாளை அரங்கனார் எங்கே?

சீரிளமைப் பருவத்திலேயே நல்லாசிரியரை அடுத்துக் கற்பன கற்று, இருபான் ஆண்டுக்குள்ளாகவே இலக்கண இலக்கிய சமய ஊற்றங் கண்டு, இதழாசிரியராய், நூலாசிரியராய், பேராசிரியராய், பொழிவாளராய்ப் பல நிலைக் கடன்கள் ஆற்றித் தமிழ் வானில் முழுமதியாய்த் திகழ்ந்த நாகை அடிகளார் எங்கே?

கண்டதும் காதல்'என்பது காதலர் காட்சிச் சிறப்பு உரைக்கும் பழவுரை; ஆனால் இவர்கள் கண்டதும் இலரே! ஏன்? கேட்டதும் கூட இலரே! தூத்துக்குடி சைவ சித்தாந்த சபைக்கு அடிகளார் பொழிவு செய்ய வருங்கால் அரங்கர் ஆங்கு இருந்தாலும் அலரே! அவர் பொழிவினைக் கேட்டோர் வழிக்கேட்டுப் பேரன்பு காண்ட இயல்பாய் நடக்கக் கூடியதோ? அவர்கள் வழியே அடிகளார் எழுதிய நூல்களை அறிந்து கொழும்புக்குத் தருவித்துப் பயிலும் ஆர்வம் எளிதில் ஏற்படக் கூடியதோ? அரங்கர் என்ன, தேர்வுக்குப் படித்தாரா? ஆய்வுக் களப் பணிக்குத் தம்மை ஆளாக்கிக் கொண்டிருந்தாரா? பல் பொருள் வாணிக நிறுவனக் கணக்கருக்கு என்ன இவ் வியப்பான பற்று உண்டாக வேண்டியிருக்கிறது? அவர் பற்றுக்கும் அவர் ஈடுபட்ட தொழில் துறைக்கும் உண்டாகிய தொடர்பும் கட்டாயமும்தான் என்ன? எதுவும் இல்லையே!

அரங்கர் வளமாக வைத்திருந்த கைப் பொருள் கொண்டோ அடிகளார் இயற்றிய நூல்களையும் இதழ்களையும் வாங்கினார்? அப் பொருள் கொண்டோ அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்தார்? அப் பொருள் காண்டோ அடிகளார்க்கு மாளிகை கட்டுவதற்கும், அச்சகம் வைத்தற்கும், இதழ் நடத்துதற்கும் வேண்டும் போதெல்லாம் தொகை வழங்கினார்? இல்லையே!