உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாரும்

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

கொள்வினை

127

கொடுப்புவினைக்குரியவராய் விடுவரோ? அடிகளார் எண்ணம் அரங்கரை மருகராக்கிக் கொள்ள முந்தியதேன்? அரங்கர் உள்ளமும் அதனை ஏற்றதேன்? அம்பிகையார் ஆர்வப் பெருக்கு அரங்கரை வரிக்க உந்தியதேன்? இருபால் குடும்பத்தவரும் இனிதின் இசைந்தது ஏன்? இசைந்த திருமணம் திடுமென இடைத்தடையுற்றதேன்? தடையைத் தகர்த்தெறியத் தக்க உரனை இருபால் காதலரும் இயல்பாய்க் காண்டு முருகி நின்றதேன்? உண்மைக் காதலுக்கு உருகி நின்று அவர்க்கு உதவுதற்காகவே நல்லோர் பலர், நாடி ஓடிவந்து அரங்கர்க்கும் அடிகளார்க்கும் பிணக்கம் உண்டாகியும், அரங்கர் அம்பிகை திருமணம் தடையுற்று நின்றும், தம் அன்புத் தொடர்பை விடாமல் பொதுத் தொண்டை மறவாமல், அடிகளாரைப் பல்கால் சென்று கண்டும் கலந்தும் அவர்க்கு ஆவன புரிந்தும், அவரைக் கொண்டு செய்வன செய்தும், டையறவுபடாத அன்பை விரித்துக் கொண்டே, அரங்கரின் இளவல் சுப்பையவேள் காலமெல்லாம் தொடர்ந்து தொடர்பு கொண்டிருந்ததேன்?

நல்லாற்றுப்படுத்ததேன்?

டைப்

கடும் பகையிடையேயும், 'இனி நடவாது இத் திருமணம்' என்று கைவிட்ட போதிலேயும் அவ்வாறு ஆகாமல், சான்றோர் மகிழ, அடிகள் தம் திருமகளாரை வழங்க, அரங்கர் தம் மனையரசியாய் அம்பிகையாரைக் கொள்ள வாய்த்ததும் நடைபெறக் கூடியதோ? பிணக்கம் நீங்கி இணக்கம் ஆகிய பின்னும் மாமன் மருகராய் அமைந்தபின்னும், இடைஇடை பிணக்கம் ஏற்பட்டும் இணக்கம் ஏற்பட்டும் அவற்றால் கழகப்பணியோ அதன் வளர்ச்சியோ குறைவுபடாமல் வளர்ந்து வந்தது, கருதிப் பார்க்கவும் இயல்வதோ? பங்காளர், ஆட்சிப் பொறுப்பாளர் உணர்வுக் கொந்தளிப்புகள், உள்ளக்கோள்கள் எத்தனை வகையாலெல்லாம் உருக்குலைக்க எழுந்தன? அவையெல்லாம் தலைமடங்க வீறுகொண்டு வெற்றி தலைதூக்கி நடக்க வாய்த்ததே! செயலாண்மைவல்ல அரங்கரும், அறிவாண் மைவல்ல அம்பிகையும் நடுவயதை நண்ணியும் நண்ணாதும், எண்ணியும் பரர்கவியாப் பெரும் பிரிவுக்கு ஆட்பட்டதும், அதற்குள்ளாகவே தம் ஒரு பிறவியில் செய்யத்தக்கவை யெல்லாம் குறைவுபடாமல் செய்வித்து அழியும் உலக;ல அழியா நிலைபெற்றதும் எண்ணிப் பார்ப்பின் உலகியல் விளக்கம் விளங்காமல் போகாது!