உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

‘திறவோர் காட்சி' இன்னதெனக் கணியன் பூங்குன்றனார் பாட்டு தெளிவிக்கிறது. சங்கச் சான்றோருள் ஒருவராகிய அப்பெருமான், “கல்பொருதிரங்கு மல்லல்பேர்யாற்று, நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர், முறைவழிப்படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம்" என்கிறார். (புறம். 192) ‘கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின்வழியே போம் மிதவை போல அரிய வுயிர் ஊழின் வழியே படுமென்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம்" என்பது இவ்வடிகளுக்கு அமைந்த பழையவுரை.

66

பேராறு

சிறுதுளியே பேராறு பேராறு ஆகும் முறையும், கல் பாருது இரங்கும் முறையும், சிறுதுளி உடல் அல்லது உருவம் மறைந்து மறைந்து மாறிமாறி வளர்ந்து வளர்ந்து வந்த முறையும், ஆருயிர் யாவும் பின்பற்றும் முறையாகும். ஆனால் ஏனைய உயிர்களிலிருந்து மாறுபட்டவன், மனிதன். ஏனைய உயிர்களுக்கில்லாத எண்ணித் துணியும் ஆற்றலும், தீதையும் நன்றையும் பகுத்தறி திறனும் மனிதனுக்கே உரியன. ஆதலின், அவன் எல்லா உயிர்களுக்கும் உயிர்களுக்கும் பொதுவான முறைகளின் வழிப்படுதலோடு அந்நீர்வழிப்பாடும் புணைபோலவும் அவன் ஆருயிர் முறை வழிப்படுகின்றது” என்றும்,

66

இல்வாழ்வான் தனிமனிதனாக வாழ்பவன் அல்லன்! தன் மனைவியுடன் சேர்ந்து வாழ்பவன். மிதவைகள் ஒன்றாமாறு இறுகப் புணைக்கப்படுதல் போல் இங்கு ஈருயிர்கள் அன்பெனும் பாசத்தால் ஒன்றாமாறு பிணிப்புற்று ஒருமையெய்தி வாழ்க்கைப் பேராற்றில் புணையே போல் அமைகின்றன. புணையின் உறுதியும் அது நீர்வழியில் தரும் பயனும் அதன் பிணிப்பின் வன்மையைப் பொறுத்தே அமைவன. அப் பிணிப்புறுதியே அப் பிணை தரும் பயனின் உறுதியுமாகும்” என்றும்,

‘புணை, நீருள் முற்றிலும் ஆழ்ந்தால் நீரே அதை அழித்து விடும்! நீருள் சற்றும் ஆழாது நிற்பின் அது பயனற்றதாகும். அதன்மேற் செல்வோரை அவர் ஏறு முன்னரே அப் புணையே புரண்டு கவிழ்த்துவிடும். நீர் வழிப்படும் இப் புணையின் ப்பு

முறையே போல் இல்வாழ்வான் ஆருயிர் முறைவழிப்

படுகின்றது” என்றும் அறிஞர் கு. கோதண்டபாணியார் தரும் புத்துரை விளக்கம். திறவோம் காட்சியைத் தெள்ளிதில்