உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

129

விளக்குவதாம். (திரு. வ. சு. பவளவிழா மலர்! ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் திறன்)

பிறந்தபிறப்புத் தொடர்பிலராய், முந்தைப் பிறப்புத் தொடர்பால் மூளும் தொடர்பை இயற்கைப் புணர்ச்சி, தெய்வக் கூட்டம் எனப் பழந்தமிழ் இலக்கணம் கூறுதல் திறவோர் காட்சியேயாம். அக் காட்சியே கோப்பெருஞ்சோழர் பிசிராந்தையார் தொடர்பு போலவும், மறைமலையடிகளார் திருவரங்கனார் தொடர்பு போலவும் நிகழ்த்திக் காட்டியதாம்.