உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணைப்பு: 1

கடிதங்கள்

திரு. வ. திருவரங்கம் பிள்ளை

கொழும்பு

V. Thiuruvarangam Pillai

of Palayamcottai.

கொழும்பு, 9 - 10 - 1913

J

84, Bankshall Street, Colombo, 9 - 10 - 1913.

அன்பினு மருமையினு மிக்க சுப்பையாவுக்கு,

உன் கடிதம், அருமை அண்ணாத்தவர்கள் கடிதம், அருமைச் சகோதரன் ஐயம்பிள்ளை கடிதம் மூன்று உரிய காலத்தில் கிடைத்தன. இவ்விடத்தில் என் சம்பள விஷயமாய்த் தருக்கம். அதனால் பணம் அனுப்பச் சுணக்கம். விரைவில் அனுப்பத் தெண்டிக்கிறேன். முன் எழுதியனுப்பிய அப்பியாசங் களைச் செய்து வருகின்றாயா? அத்தோடு கீழ்வரும் முறைப்படி அப்பியாசத்தைக் கீழ்க்கண்ட விவரப்படி செய்து வருக.

66

சுவாசம்'

உட ம்பின் வலிவுக்கு முதன்மையான சுவாச ஓட்டத்தை ஒருவாறு ஒழுங்கு செய்துகொள்ளல் வேண்டும். நல்ல காற்று ஓட்டம் உள்ள ஓர் அறையிலே தனிமையாகப் போய் நாற்காலியிலாயினும், நிலத்தில் மணை மேலாயினும் இருந்து கொள்ளல் வேண்டும். இருந்தபின் முதுகு, கழுத்து முதலிய றுப்புகள் சிறிதும் வளையாமல் நேராக நிற்கும்படி செய்தல் வேண்டும். அதன்பின் வலது கைப்பெருவிரால் வலது நாசியை அடைத்து, இடது நாசியால் உள்ளிருந்த வாயுவை வெளியே மெதுவாய்க் கழித்துவிடுக. அங்ஙனங் கழித்தவுடனே அவ்விடது நாசியினாலேயே வெளியேயுள்ள வாயுவை மெதுவாக உள்ளே ழுத்த பிறகு வலது கை மோதிர விரலால் நாசியை அடைத்துக் கொண்டு வலது நாசியைத் திறந்து உள்ளிழுத்த வாயுவை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. அவ்வாறு வெளிவிட்ட பின் மறுபடியும் அவ் வலது நாசியினாலேயே வெளி வாயுவை உள்ளிழுத்து இழுத்தவுடன் வலது நாசியை முன் சொன்னவாறே அடைத்துக்கொண்டு இடது நாசியைத் திறந்து உள்ளிழுத்த வாயுவை அதன் வழியே மெல்ல வெளிவிடுக. இங்ஙனம் இ நாசியிலிருந்து வலது நாசிக்குப் போய்த் திரும்பவும் இடது

து

து