உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் – 26

தீர்மானித்து ஒதி வருகின்றோம். உன் பேரன், பேர்த்திமார் களையும் அவ்வாறே ஓதி வர ஏற்பாடு செய்திருக்கின்றோம். நீ என்ன நினைத்துக் கொண்டாலுஞ் சரி, உன் பேரன் பேர்த்திமார்கள் அத்தனை பேரும் டை டவி ாமல் நீ எப்பொழுது வருவாய், எப்போழுது வருவாய் என்றே கேட்ட வண்ணமாயிருக்கின்றார்கள்.

ஆவுடையப்பன் ன்

ஆச்சி

இங்கேயிருந்தால் கண்ணை நீ பார்க்கமாட்டாயோ? அப்பா' என்று கேட்கிறான். கண்ணுக்காக நீ கவலைப்படாதே. அழாதே. நீ அழுதால் என் மனந் தாழாது. நான் உன்னிடத்தில் பேரன்பு கொண்டவன் என்பது உனக்கு நன்கு தெரியும். உன்னை நினைத்துவிட்டால் என்னையறியாமலே என் கண்ணில் ஊற்று நீர் ஒழுகிக்கொண்டேயிருக்கும். உன் வயிற்றிற் பிறந்தமை யினாலேயே எனக்கு இத்தனை சீரும் சிறப்பும் வந்ததாக இன்றும் என்றும் நினைத்து நடந்து வருகின்றேன், வருவேன். பிறர் பொருளுக்காசைப்படாமலும் பிறர் நலம் பேணிப் பிறர்க்கு என் பொருளை வாரி வாரி இறைத்தாலும் ஆண்டவன் இன்றுவரை எனக்கு நன்மையே செய்து வருகிறதை எண்ணிப் பார்த்து அவன் திருவடிகளை இடையறாது போற்றி வருகின்றேன். இங்கே உனக்கு எல்லா வசதிகளும் உண்டு. வெளிக்குப் வெளிக்குப் போக, பிள்ளைகளோடு அளவளாவி மகிழ டாக்டர்கள் எல்லா இடத்திலும் ஒன்று போலவேதான் கவனிப்பார்கள். நீ இங்கு வந்து ‘அங்கு கண்ணைப் பார்க்கச் செய்யவிடாமல் வரவழைத்து விட்டாயே’ யென்று சினந்து அஞ்சித்தான் வாளாவிருந்தேன். நான் என்றுமே இரக்கமான நெஞ்சுடையவன் என்பதை எவரும் நன்குணவர். உண்மையை மறைக்க முடியாது. செல்வ நிலையாமையை எண்ணி நடக்குமாறு ஆண்டவன் அருள் புரிய வேண்டிவரும்.

L

பேசிவிடுவாயோவென்று

அன்பன்,

(ஓம்.) வ. திருவரங்கம்.