உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

ஓம்

133

பல்லாவரம், 29-8-1917

பிற்பகல் நான்குமணி.

அன்புருவாய் என்னிரு கண்மணியாய்த் திகழும் செல்வச் சீரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையர்கட்குச் சிவபெருமான் திருவருளால் எல்லா நலங்களம் உண்டாவதாக.

26ஆம் தேதி இரவு 12 மணிக்குத் தாங்கள் அன்புடன் எழுதிய கடிதம் இப்போதுதான் என் கைக்கு எட்டியது. இதனைக் கண்டதும் ஸ்ரீமான் கோபாலகிருஷ்ணன் பிள்ளை யவர்கட்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றேன். ஆனால் அது நாளைக்கே அவர்கள் கைக்கு எட்டுமோ என்பது ஐயந்தான். தாங்கள் கடிதம் சிறிது முன்னே கிடைத்திருந்தால் உடனே காரியங்களில் நாம் கவலையின்றி யிருக்கும்பொருட்ட மாதந் தோறும் பொருளுதவி செய்ய முன்வந்த அன்பர்கள் நமது பெருமைக்குத் தக்கபடி உதவினாற்றான் அவர்கட்குப் புகழும் புண்ணியமுமாம். அங்ஙனமின்றிப் பிச்சை கொடுப்பதுபோல ரூபா இரண்டரையும் இரண்டுந் தர எண்ணுவார்களாயின் அஃது அழியாப் பெருங்கல்விச் செல்வத்தைப் பெற்ற நம்மையும் நமக்கு அதனை அருளிய சிவபிரானையும் குறைவுபடுத்துவ தாகும். 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்றபடி நாம் அச்சிறிய தொகைகளைப் பெற இசையோம் என்பதை நம் அன்பர்கட்குத் தெரிவித்து விடுங்கள். ஸ்ரீமான் கோபால கிருஷ்ணபிள்ளையவர்களும் கொழும்பிற் பழைய வியாபாரியும் பெரிய கடைக்காரருமாயிருத்தலால் அவர்கள் பால் பத்து அல்லது ஏழு ரூபாய்க்குக் குறைந்தது வாங்க வேண்டாம். இந்தக் கடிதத்தையும் அவர்கட்கும் ஏனை அன்பர்கட்கும் காட்டுங்கள். தாங்கள் குறிப்பிட்ட மற்ற அன்பர்கட்கும் உடனே கடிதங்கள் எழுதுவேன். 'சிறுதேவதைகட்கு உயிர்ப் பலியிடலாமா?' என்னுந் துண்டுப் பத்திரஞ் சித்தமாகின்றது. ஒரு வாரத்தில் அனுப்புவேன். காகித விலை இவ்வாரம் இன்னும் மிகுதியாயிற்று ஞானசாகரம் 8ஆம் பதுமமுஞ் சித்தமாகின்றது. பெரியபுராண வுரையுஞ் சித்தமாகும். தொகை அச்சுக்கும் உரைக்கும் உடனே அனுப்புங்கள். மற்றை பின். சுகம்;

அன்புள்ள,

வேதாசலம்.