உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையடிகள்

இளங்குமரனார் தமிழ்வளம் - 26

திருமுருகன் அச்சுக்கூடம்,

பல்லாவரம்

17-9-1948

அன்பிற் சிறந்த வ. சுப்பையாபிள்ளைக்கு அம்பலவாணர் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக.

உங்களருமை மனைவி குழந்தைகளும் உங்கள் தமையனார் குழந்தைகளும் மருமகன் முதலியோரும் நலமுடன் வாழும்படி அம்பலவாணர் திருவருளை வேண்டுகிறேன். எனது குடும்ப நிலையும் எனது தொண்டும் யானிருக்கும் போதே ஓர் ஒழுங்கு பெறுதற்கு விரைந்து உதவி செய்வீர்களாயின் அஃதுங்கூட கழியாப் புகழ் புண்ணியங்களைத் தரும். கழகம் பொதுவுடைமை யாதலால் தொழில் முறையில் அஃதுங்கட்குப் பெயரும் புகழும் பயவாது. சிறப்பு முறையில் என்னுடைய நூல்கள் பரவும் முறையில் தொண்டாற்றுவீர்களாயின், அது தமிழ்மக்களும் பிறரும் நூல்களை என்றும் புகழ்ந்து பாராட்டுதற்கு

ஞ்செய்யும். இனித் தமிழுலகில் என்னுடைய நூல்களே பெரிதும் பயிலப்படும். அதை நினைந்து யான் சொல்லுமாறு செய்யுங்கள். என்னும் நிலையத்தையும் நூல்களையும் பிறர் வாங்குவதைவிட, நீங்களே வாங்கினால் நமதுடைமை நமது குடும்பத்திலேயே இருந்து இருந்து உலகிற்கு பெரும்பயன் தரும். பாளையங்கோட்டையிலுள்ள உடைமை முழுதும் விற்று என்னுடைய நிலையத்தையும் நூல்களையும் வாங்கிக்கொண்டு நீங்களெல்லாரும் பல்லாவர நிலையத்திலேயே நிலையாகக் குடியேறி நன்கு உயிர் வாழலாம். செலவு சுருங்கும். பிள்ளைகள் எல்லாங் கல்வியில் தேர்ந்து மேனிலையடைவர். ஓர் அச்சகமும் இந் நிலையத்திலேயே வைத்துக்கொண்டு என் நூல்களை யெல்லாம் பதிப்பிட்டு வெளியிடலாம். மிகுதியாக ஊதியமும் கிடைக்கும். எனது பிற்காலம் அமைதியாகச் சிவவழிபாட்டிற் செல்லும். நம் குடும்பத்தார் தனித்தமிழ்த் தொண்டிலே முழுதும் ஈடுபட்டு நின்ற பெருஞ்சிறப்புண்டாம். இன்னும் பற்றியனவெல்லாம் நேரிற் பேசுவம். விரைந்து வருக! சிவபிரான் திருவருள் வழங்குக! தனித்தமிழ் ஓங்குக! நலம்.

அன்புள்ள,

மறைமலையடிகள்.

நாள்

இ து