உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு

அருமைப் புதல்வன் திருநாவுக்கு,

135

நின்னருமைத் தமக்கை நீலாம்பாள் இறந்த செய்தி கேட்டு, யானும் நின் அன்னை தமையன் தங்கையும் மற்றையோரும் அனலிடை மெழுகாய் உருகி அரற்றினோம். பிறப்பை வகுத்த றைவன் இறப்பையும் உடன் வகுத்தால் சிற்றுயிர்களாகிய யாம் என் செய்வதென்று கலங்கினோம். தாய் தந்தையரை ஒருங்கிழந்த நின் தமக்கையின் மக்கள் நிலைமையை நோக்கி நெஞ்சம் நீராய்க் கரைகின்றது. அவ்வுயிர்களைப் பிறவியிற் கொணர்ந்த இறைவனே அவர்களைக் காத்துப் பயன்படுத்தும். வீட்டிலுள்ளார் அனைவர்க்கும் எங்கள் ஆறுதல் மொழிகளைத் தெரிவி.

மறைமலையடிகள்.